For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானில் அதிசயத்தை நிகழ்த்திய சந்திர கிரகணங்கள் - 2018 பிளாஷ் பேக்

சந்திரச் சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய வானியல் நிகழ்வுகள் என்றாலும் இந்த ஆண்டு புளூ மூன், ரெட் மூன், மிக நீண்ட சந்திர கிரகணம் என வானில் பல அரிய நிகழ்வுகள் அரங்கேறின.

Google Oneindia Tamil News

சென்னை: சந்திரச் சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய வானியல் நிகழ்வுகள் என்றாலும் இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் அதிசயமாக பேசப்பட்டது. அது சூப்பர் நிலவு, நீல நிலவு, சிவப்பு நிலவு என்று கூறப்பட்டது. 152 வருடங்களுக்கு பின் இந்த அரிய நிகழ்வு வானில் அரங்கேறியது.

நிலா எப்போதுமே பால் போல வெள்ளையாகவே இருக்கும். சின்னச் சின்ன கறைகள் இருந்தாலும் அதுவும் அழகுதான். ஆனால் சூரியன் உதயத்தின் போது ஆரஞ்சு பழமாக மாறி பின்னர் மஞ்சள் நிறமாக சுட்டெரிக்கும். மாலையில் ஆரஞ்சாகவும், சிவப்பாகவும் மாறும்.

இந்த ஆண்டு துவங்கியதே பவுர்ணமியில்தான். ஜனவரியிலும், ஜூலையிலும் நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது நிலவிற்கு நீல நிலா, ரத்த நிலா என்றெல்லாம் கடந்த ஆண்டு பெயர் சூட்டினார்கள். அந்த அதிசய நிலாவை கோடிக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

இரண்டு பவுர்ணமி

இரண்டு பவுர்ணமி

ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வருமானால் இரண்டாவதாக வரும் முழு நிலவை நீல நிலா என்று அழைக்கின்றனர். இது சாதாரணமாக இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நிகழும். ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி 1, 31 என ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தது. இதனை புளூ மூன் அல்லது நீல நிலா என அழைத்தனர்.

 நீல நிலாவில் சந்திர கிரகணம்

நீல நிலாவில் சந்திர கிரகணம்

ஜனவரி 31ஆம் தேதி சூப்பர் நிலா வந்த நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட்டதால் இது 152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படும் அரிய நிகழ்வு என்று பேசப்பட்டது. அமெரிக்காவில் சுமார் 152 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று நிகழ்ந்தது. நிலா பூமிக்கு மிக அருகில் வந்ததால் 14 சதவிகிதம் பெரிதாகவும், 30 சதவிகிதம் கூடுதலாக பிரகாசமாகவும் இருந்தது. இந்த நிலாவை சூப்பர் நிலா எனவும் அழைத்தனர்.

 ப்ளட் மூன்

ப்ளட் மூன்


ரத்த நிலா என்பது சாதாரணமாக வழக்கத்தில் உள்ள ஒரு சொல். இது அறிவியல் பூர்வமான சொல் அல்ல. கிரகணத்தின்போது நிலா வெண்மையாக இல்லாமல் சிவப்பு நிறத்தில் இருந்து எழுந்து வரும். இதற்குக் காரணம் முழு நிலவு கிரகணத்தின் போது பூமியின் கரு நிழல் வழியாக கடந்து செல்லும். அப்பொழுது சூரிய வெளிச்சம் அனைத்தும் மறைக்கப் பட்டுவிடுகிறது. இதனால் நிலவின் ஒளி பிரதிபலிப்பதில்லை. இருந்தாலும் பூமியிலுள்ள வளி மண்டலம் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. அப்பொழுது நீல ஒளி சிதறடிக்கப் பட்டு விடுவதால் சிவப்பு ஒளி மட்டும் நிலவில் பட்டு சிவப்பாகத் தெரிகிறது.

 21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திரகிரகணம்

21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திரகிரகணம்

2018 ஜனவரி 31ஆம் தேதி நிகழ்ந்த சூப்பர் பிளட் மூன் நிகழ்வைத் தொடர்ந்து, ஜூலை 27-28ல் வானில் மிக நீண்ட சந்திர கிரகணம் தோன்றியது. இது 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்று பேசப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம், 43 நிமிடங்கள் இது நீடித்தது. ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் இந்த முழு சந்திர கிரகணம் தெரிந்தது.

இந்தியாவில் தெரியாத கிரகணங்கள்

இந்தியாவில் தெரியாத கிரகணங்கள்

2019 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியன்று மார்கழி 22ஆம் தேதியன்று ஞாயிறு கிழமை பூராடம் நட்சத்திரத்தில் அதிகாலை 5.04 மணி முதல் 9.18 மணிவரை கேது கிரகஸ்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஜனவரி 21ஆம் தேதி நிகழ உள்ள ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஜூலை 3, 2019 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 3.20 திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.

சந்திர சூரிய கிரகணங்கள்

சந்திர சூரிய கிரகணங்கள்

2019ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி ஆடி 1ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணிவரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரகஸ்த பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். இதேபோல டிசம்பர் 26, 2019ஆம் ஆண்டு வியாழக்கிழமை மூலம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரகஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.

English summary
2018 Flash back : 2018 Lunar eclipse Blood moon and Red moon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X