2022 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு யோகங்கள் தேடி வரும்
2021 ஆம் ஆண்டு முடிந்து 2022ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் வெளிநாட்டு யோகம் கை கூடி வருமா என்று பார்க்கலாம்.
சென்னை: 2021ஆம் ஆண்டு முடியப்போகிறது. புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிதாக பிறக்கப் போகும் 2022ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்குமே இருக்கும். புத்தாண்டில் தனுசு, மகரம், கும்பம்,மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையுமா? என்றும் அரசு வேலை யாருக்கு கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
2021ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி பத்தாம் இடமான மகரம் ராசியிலும் 11ஆம் வீடான கும்ப ராசிக்கும் செல்கிறார். தற்போது லாப வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருவும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று மீனம் ராசியில் அமரப்போகிறார். பின்னர் வக்கிரமடைந்து கும்ப ராசிக்கு சென்று மீண்டும் நவம்பர் மாதத்தில் மீன ராசிக்கு செல்வார். ராகு பகவான் ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார்.
நவ கிரகங்களில் ஒருவர் ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு வெளிநாடு செல்லும் யோகத்தை தீர்மானிக்கும். சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கிரகங்கள் ஆகும். 2022ஆம் ஆண்டு தனுசு, மகரம், கும்பம், மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவித்த உங்களுக்கு 2022ஆம் ஆண்டு புத்துணர்ச்சி தரக்கூடிய ஆண்டாக கவலைகள் நீங்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டில் குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிலும் சுக ஸ்தானமான நான்காவது வீட்டிலும் பயணம் செய்கிறார். ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் கேது லாப ஸ்தானத்திற்கும் பெயர்ச்சி அடையப்போவதால் உங்களுக்கு மன நிம்மதி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஆரம்பமே அமர்களம் என்பது போல உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புரமோசன் கிடைக்கும். நான்காம் வீட்டில் குரு பயணம் செய்யும் காலத்தில் குருவின் பார்வை பத்தாம் வீட்டில் பதியும் போது புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். உயர்கல்விக்காக காத்திருக்கும் மாணவர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். அரசு ஊழியர்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் பளு நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
2022ஆம் ஆண்டு ஏழரை சனி விலகும் காலத்தில் திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். வரன் பேசி முடிவு செய்யலாம். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் கை கூடி வரும். திருமணமாகி சண்டை சச்சரவினால் பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள். புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு பிறக்கப்போகும் புத்தாண்டில் சங்கடங்கள் நீங்கி சாதனை புரியும் ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவானும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. நான்கில் ராகு பத்தாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்வதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். டென்சன், மன அழுத்தம் குறையும். திடீர் வருமானத்தை தரும். வெளிநாடு பயணங்கள் செல்லும் காலம் கை கூடி வந்துள்ளது. மாணவர்களுக்கு படிப்பதற்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. படித்து முடித்து விட்டு காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில் மாற்றமும் புரமோசனும் கை கூடி வரும். அரசு அதிகாரிகளுக்கு பளு நீங்கும் புதிய பொறுப்புகள் வரும். வேலைக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீண் பழிகள் நீங்கும். அவப்பெயர்கள் விலகும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல வரன் கை கூடி வரும். திருமணம் சுப காரியம் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் இருந்த போராட்டங்கள் நீங்கும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால்வலி பிரச்சினைகள் வரலாம் விழிப்புணர்வு அவசியம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜென்ம குரு குடும்ப குரு என மாறி மாறி அமைகிறது. சனி ஜென்ம சனியாக வந்து அமரப்போகிறார். ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். வேலையில் மாற்றம் வேண்டாம். அனுபவங்களே உங்களுக்கு படிப்பினையைத் தரும் காலமாகும். வேலையில் அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். அரசு வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். பொறுப்புகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் தேவையற்ற பிரச்சினைகளை கண்டு கொள்ள வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்களில் ஆண்டின் முற்பகுதியில் தடைகள் ஏற்படலாம். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம் வெற்றியில் முடியும். 2022ஆம் ஆண்டு வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அகலக்கால் வைத்து பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். அலட்சியம் இல்லாமல் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். பயணங்களில் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. சொத்து வாங்கும் போது கவனம் தேவை. வீடு சொத்து வாங்க இது ஏற்ற தருணம் அல்ல. வண்டி வாகனம் வாங்க சரியான நேரம் அல்ல. இந்த குல தெய்வ வழிபாடு குடும்பத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் காக்கும். மொத்தத்தில் 2022ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. எளிதில் சமாளித்து முன்னேறுவீர்கள்.

மீனம்
2022ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களுக்கு விரைய குருவாக இருந்து அதிசாரமாக ஜென்ம குருவாக மாறுகிறார். சனி பகவான் விரைய சனியாக பயணத்தை தொடங்குகிறார். ராகு இரண்டாவது வீட்டிலும் கேது எட்டாவது வீட்டிலும் பயணம் செய்வதால் கவனமும் விழிப்புணர்வும் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் ராசி நாதன் ஆட்சி பெற்று அமர்கிறார். ஹம்ச யோகம் பெற்று அமரப்போகும் குருவினால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் ஏழரை சனியாக பயணம் செய்யப்போவதால் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். புது வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்புகள் கை கூடி வரும். ஐடி கம்பெனிகளில் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவியில் முன்னேற்றம் உண்டாகும். முதலீடுகளில் கவனமும் நிதானமும் தேவை. திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசினாலும் இடையூறுகள் ஏற்படும். வருட பிற்பகுதியில் தடைகளைத் தாண்டி முன்னேற்றம் உண்டாகும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தைக்காக தவம் இருக்கும் தம்பதியினருக்கு தடைகளைத் தாண்டி இந்த ஆண்டு வரமாக புத்திரபாக்கியம் கிடைக்கும். 2022ஆம் ஆண்டு மொத்தத்தில் தடைகளைத் தாண்டி முன்னேறக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications