நெருப்புடா... அக்னி வெயிலுக்கான காரணமும்... அதற்கான பரிகாரமும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வானிலைக்கும் தட்பவெப்ப நிலைக்கும் தொடர்பு இருக்கிற மாதிரி வானிலைக்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.
மற்ற வருஷங்களை விட இந்த வருஷம் அதிக வெயில் பாதிப்புகள் இருக்கும் என ஜோதிட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடைக்காலமும் வந்துவிட்டது. வெயில் அனலாய் தகிக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் என்ற சித்திரை வெயில் தொடங்க உள்ள நிலையில், தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி தகிக்கிறது.

சித்திரை மாதம்:

சித்திரை மாதம்:

சித்திரை என்றால் அந்த மாதத்தில் கடுமையான வெயில் இருக்கும்,அதற்கு முந்திய முன் பனிக் காலம் பின் பனிக்காலமாகிய தை ,மாசி,பங்குனி ஆகிய மாதங்களில் பனி மூட்டத்தில் ,காற்றின் நீர் பதத்தால் தூரத்தில் உள்ள பொருட்கள் மட்டுமல்ல அருகில் உள்ள பொருட்களும் தெளிவில்லாமலேயே தெரியும் ,ஆனால் சித்திரை மாத வெயிலில் பனி அடங்கி பார்க்கும் இடங்கள்,பொருட்கள் எல்லாம் சித்திரம் போல் தெளிவாகத் தெரிவதால் தான் இதற்கு சித்திரை என்று பெயர் வந்திருக்கலாம் என தோன்றுகிறது.

ஜோதிட காரணங்கள்

ஜோதிட காரணங்கள்

"சித்திரை மாதம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்ததான் செய்யும் " நீங்க என்ன புதுசா சொல்ல வந்துட்டீங்கன்னு சிலர் வெயிலினால் ஏற்பட்ட எரிச்சலினால் நினைப்பது புரிகிறது. வானிலைக்கும் தட்பவெப்ப நிலைக்கும் தொடர்பு இருக்கிற மாதிரி வானிலைக்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.
இந்த ஆண்டு வெயில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என ஜோதிட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சித்திரையில் சூரியன்

சித்திரையில் சூரியன்

சித்திரையில் நெருப்பு கிரகமான சூரியன் உச்சமாவது அதிக வெயிலுக்கு முக்கிய காரணம் என்றாலும் இந்த வருடம் கொடூரமான வெயில் தாக்கத்திற்க்கு மேலும் சில கிரகங்கள் வலு சேர்க்கின்றன. சித்திரை பிறந்ததிலிருந்து சித்திரை 14ம்தேதிவரை அதாவது ஏப்ரல் 27ம் தேதிவரை சூரியன் அசுவினி நட்சத்திரத்தின் சாரத்தில் பயனிக்கிறது. அசுவினி நட்சத்திரம் கேதுவின் ஆதிபத்யம் பெற்ற நட்சத்திரமாகும். ஸர்ப கிரகமான கேது ஒரு நெருப்பு கிரகமாகும்.

நெருப்பு கிரகம்

நெருப்பு கிரகம்

நெருப்பு ராசியான மேஷத்தில் நெருப்பு கிரகமான சூரியன் நெருப்பு மற்றும் ஸர்ப கிரக சாரத்தில் நிற்கும்போது மிக அதிகமான வெயில் பதிவாகும்
இதனை தொடர்ந்து நெருப்பு ராசியதிபதியான செவ்வாய் மற்றொரு நெருப்பு ராசியான சூரியனின் சாரத்தில் ரிஷபத்தில் பயனிக்கிறது.

வெயில் அதிகரிக்க காரணம்

வெயில் அதிகரிக்க காரணம்

சூரியனின் சுய வீடு மற்றும் நெருப்பு ராசியான சிம்மதில் நெருப்பு கிரகம் மற்றும் ஸர்ப கிரகமான ராகு கேதுவின் சாரத்தில் பயனிக்கிறது.
மேலும் மற்றொரு நெருப்பு ராசியான தனுசில் சனி பகவான் வக்கிரம் பெற்று நிற்கின்றார். ஆக காலபுருஷனுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 1-5-9 ஆகிய மூன்று கிடங்களிலும் அசுப கிரகங்கள் அசுபத்தன்மை பெற்று நிற்பதால் இந்த காலகட்டத்தில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகும் என ஜோதிட ஆய்வு கூறுகிறது.

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

அப்படியென்றால் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பே இல்லையா? என்றால் தற்காலிகமாக ஒரு சிறு வாய்ப்பு இருக்கிறது என்பது சிறிது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். வரும் சித்திரை 14ம் தேதி முதல் அதாவது ஏப்ரல் முதல் சித்திரை 24ம் தேதி மே 7ஆம் தேதி வரை சூரியன் சுக்கிரனின் நட்சத்திரமான பரணியில் பயனம் செய்யிருக்கிறது. என்றாலும் சித்திரை 21ம்தேதி அதாவது மே 4 முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க உள்ளது

கோடை மழை

கோடை மழை

எனவே ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைவதோடு பல இடங்களில் கோடை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிட ஆய்வு கூறுகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்துவிடுவதும் செவ்வாய் சந்திரனின் நட்சத்திரமான ரோஹினியில் பயனம் செய்வதும் இதனை உறுதி செய்கிறது. மே 4 முதல் சித்திரை முடியும்வரை அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறண்ட வானிலை காணப்படும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

வெயிலின் கொடுமை

வெயிலின் கொடுமை

கால புருஷனுக்கு 12ம் வீடான மீனத்தில் (நீர் ராசியில்) சுக்கிரன் உச்சம் பெற்று நிற்பதால் பணம் தண்ணியாக செலவாகும் என தெரிகிறது. குடி தண்ணீர் வாங்குவதிலிருந்து குளுகுளு கூழ் (ஐஸ் க்ரீம்) வாங்குவது மற்றும் குலு மனாலி செல்வது வரை பல விதங்களில் பணம் விரயமாகும். அந்த விரயத்தை நல்ல விதமாக மாற்றுவது அவரவர் சுய ஜாதக அமைப்பை பொருத்து மாறுபடும்.

என்ன சாப்பிடலாம்

என்ன சாப்பிடலாம்

எனவே இந்த வெயிலின் தாக்கம் குறைய பணம் செலவு செய்தாலும் கண்ட கண்ட குளிர்பானங்களை வாங்கி பருகி உடல்நலம் கெடுத்துக்கொள்வதை விட சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற இயற்க்கை பழரசங்கள், பழங்கள், இளநீர், நீர்மோர் மற்றும் நீர் சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, கிருணி போன்ற பழங்கள் சாப்பிடுவது நன்மையளிக்கும்.

பரிகாரம் என்ன?

பரிகாரம் என்ன?

•நிறைய தண்ணீர் மற்றும் நீர்மோர் நிறைய பருகுவது மற்றும் தண்ணீர் பந்தல் வைத்து தாகத்தோடு வருபவர்களுக்கு நீர் மற்றும் நீர்மோர் அளிப்பது நன்மை தரும்.

குறைந்த பட்சம் இரண்டு பேருக்காவது இளநீர் தானமளிக்க வேண்டும்.

•சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பருத்தியாடைகளை அணிவது. தாகமாக திரியும் பறவைகளுக்கு தாணியங்கள் மற்றும் நீர் அளிப்பது. வீட்டில் உள்ள துளசி போன்ற செடிகள் வாடாமல் நீர் இறைப்பதன் மூலம் தப்பிக்கலாம்.

• கால புருஷனுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானங்களில் பித்ருகளை குறிக்கும் சூரியன்-சனி-ராகு நிற்பதால் இறந்தவர்களின் நினைவாக வயதான பெரியோர்களுக்கு மிதியடி, குல்லா, கொடை போன்றவற்றை இயன்றவரை தானமாக அளிப்பது நன்மை. இவற்றோடு தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்க வேண்டும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Sun moves in the sign of Aries in late March and the astrological year begins with Spring. Aries is the beginning of Spring. April 14 Tamil Month of Chithirai Sun god enter the Aries.
Please Wait while comments are loading...