For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனநோய், பிரம்மஹத்திதோஷம் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி

காசிக்கு சமமான தலமாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலய இறைவனை தரிசித்தால் மனநோய்கள் தீரும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

Google Oneindia Tamil News

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாகும். பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் போக்கிய புண்ணிய தலம்.

பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல், திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்தல், திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல் ஒருவன் செய்யாத தவறை செய்தான் என சொல்லும் பொய் ஆகியவை பிரம்மஹத்தி தோஷமாகும்.

ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படுதல், புத்தி சுவாதினம் ஏற்படுதல், நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லுதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி

சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவிடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப்படுத்தப்படுகிறார். இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.

காசிக்கு நிகரான தலம்

காசிக்கு நிகரான தலம்

வடக்கே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீ சைலம் (மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும்; தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ‘திருப்புடைமருதூர்' (புடார்ச்சுனம்) கடைமருது என்றும் வழங்கப்படும். இவையிரண்டுக்கும் இடையில் இருப்பதால் இது இடைமருது ஆயிற்று. மருதவனம், சண்பகாரண்யம், சத்திபுரம் என்பன வேறு பெயர்கள் உண்டு. காசிக்கு நிகரான இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம்

வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்து திரிந்தான். பாண்டிய மன்னன், மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது. இதையடுத்து வரகுண பாண்டிய மன்னன் திருவிடைமருதூர் திருத்தலம் வந்தான்.

காத்திருந்த பிரம்மஹத்தி

காத்திருந்த பிரம்மஹத்தி

மகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக் கொண்டிருந்த , சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக் கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்து மன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணிய பிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.

தோஷம் நீங்க வழிபாடு

தோஷம் நீங்க வழிபாடு

வரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று வழிபட்டபோது, இறைவனின் பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்த வழியே மீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான். கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.

மனநோய் தீர்க்கும் தலம்

மனநோய் தீர்க்கும் தலம்

இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். இங்குள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் குளிக்க வைத்து காலை, மாலை இருவேளையும் மகாலிங்கசுவாமியை வழிபடச் செய்வார்கள். தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

பரிகார தலம்

பரிகார தலம்

திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மகாலிங்க சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள் பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடு செய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டும்.

எங்கு எப்படி செல்வது

எங்கு எப்படி செல்வது

இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடியுள்ளனர். பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம் இதுவாகும். இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர்.கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர். கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் உள்ளது.

English summary
Thiruvidaimarudur Mahalinga Swamy Temple is one of the Panchakrosha Sthalas. The presiding Deity is Mahalinga because Siva worshipped Himself. His consort is Perunalamamulaiammai. Next to him there is a magnificent stucco sculptured Nandi richly decorated and 50 ft in height.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X