For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திர கிரகண நேரத்தில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும் என்பதாலேயே தாம்பத்ய உறவை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய தினம் நிகழும் சந்திர கிரகணம் மிக நீண்டது. இந்த அரிய நிகழ்வு 600 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது. இந்தியாவில் பெரிய அளவில் இந்த கிரகணம் தெரியாவிட்டாலும் கிரகணம் பற்றி தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. கிரகண நேரத்தில் சில காரியங்களை செய்யக்கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். முக்கியமாக தம்பதியர் தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் சந்திர கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே கல்லில் 2 மாங்காய்.. 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு வாபஸ் பெற்ற பரபர பின்னணி! ஒரே கல்லில் 2 மாங்காய்.. 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு வாபஸ் பெற்ற பரபர பின்னணி!

ஐரோப்பாவின் வட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் நன்றாகத் தெரியும் எனவும் வட கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா போன்ற பகுதிகளில் மிகவும் தெளிவாக இந்த பகுதி சந்திர கிரகணம் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிக்கதிர்களால்

ஒளிக்கதிர்களால்

கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தைகளுக்கு பாதிப்பு

குழந்தைகளுக்கு பாதிப்பு


கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது என்றும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த பாதிப்பை கிரகணமூலி' என்றும் சொல்கிறார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கர்ப்பிணிகள் பத்திரமாக இருப்பது நல்லது.

 தாம்பத்ய உறவை தவிர்க்கவும்

தாம்பத்ய உறவை தவிர்க்கவும்

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும் என்பதாலேயே தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

ராகு சந்திரன் சேர்க்கை

ராகு சந்திரன் சேர்க்கை

ஒருவர் சூரிய கிரகணத்தில் பிறந்திருந்திருந்தால் அவரது ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருக்கும். அதுவே சந்திர கிரகணத்தில் பிறந்திருந்தால் சந்திரனுடன் ராகு/கேது சேர்ந்திருக்கும். சூரிய கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு உள்ள சூரியன்+ராகு/கேது சேர்க்கையை சனி அல்லது செவ்வாய் பார்த்தாலோ, அந்த சேர்க்கையுடன் சனி அல்லது செவ்வாய் இணைந்தாலோ அந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். இம்முறை சந்திர கிரகணத்தில் ராகு சந்திரன் இணைகிறது. ராகு சந்திரனுக்கு செவ்வாயின் பார்வை கிடைக்கிறது.

இறை தரிசனம்

இறை தரிசனம்

முன்பே சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். துளசியை போட்டு வைக்க வேண்டும். சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை வணங்குவதோடு இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகண நேரத்தில் வீடுகளில் விளக்கேற்றி வைத்து வழிபடலாம். தியானம் செய்வது நன்மையை ஏற்படுத்தும்.

English summary
Today's lunar eclipse is very long. This rare event occurs 600 years later. Although this eclipse is not widely known in India, there is a growing interest among many to know about the eclipse. Ancestors have said that certain things should not be done at the time of the eclipse. Importantly the astrologers have advised that the couple should not have a marital relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X