For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ புத்தாண்டு நாளில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: கொரோனா நோய் தொற்று பரவி வரும் இன்றைய கால கட்டத்தில் ஆனைவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்வது அவசியமானதாக இருக்கிறது. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது.

1. நக்ஷத்திர தோஷங்கள் நீங்க நக்ஷத்திர சாந்தி ஹோமம்.
2. எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.
3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.
4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.
5. வாழ்வில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது.

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் நியாயமான கோரிக்கைகள் வைத்தால் அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார்.

செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை மேம்பட, வெற்றி பெற இந்த ஹோமம் நடத்தபடுகின்றது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும், வாழ்வில் ஆஸ்தியை பெருக்கிக் கொள்வதன் முயற்சியில் ஏற்படும் தடைகளை சமாளிக்கலாம். இதன் மூலம் செல்வம் பல மடங்கு பெருகும்.

இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதின் மூலம், உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றம் காண முடியும், வருமானத்தை பெருக்கிக் கொள்ள இயலும்.

Covid 19: Aishwaryam Tharum 5 Homams At Sri Danvantri Arogya Peedam

பயங்கள் அச்சங்கள் விலக ஹோமம்

3.1.2022, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் 4.1.2022, செவ்வாய் கிழமை காலை 8.30 மணி வரை ஓமிக்ரான், கோவிட் 19 மற்றும் விஷக்கிருமிகளால் ஏற்படும் நோய்கள், பயங்கள், அச்சங்கள் விலகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும் 24 மணி நேரம் தொடர் யாகமாக காலை முதல் மறுநாள் காலை வரை மேற்கண்ட
நாட்களில் சிறந்த வேதவிற்பன்னர் களைக் கொண்டு அருகம்புல், சீந்தில்கொடி, சமித்து, அன்னம், நெய், பால், நெல் மற்றும் 100க்கும் மேற்பட்ட மூலிகைகள் கொண்டு பல்வேறு துன்பங்களை நீக்குவதற்கு நடைபெறுகிறது.

அக்னி வழிபாடு

நோய்களையும், துன்பங்களையும் போக்கி இன்பத்தை அருளும் ஹோமங்களில் பங்கேற்பதில் பக்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கான காரணங்களை பலரும் அறிந்திருந்தாலும் அதிலிருந்து விடுபட முடிவதில்லை. துன்பங்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜாதக ரீதியாக அமைந்த நவக்கிரக தாக்கத்தின் மூலம் நாம் ஒருவிதமான அச்சுறுத்தலுக்கு ஆளாகிறோம்.

துன்பங்களை நீக்கும் வழிகளில் 'ஹோமம்' எனப்படும் 'அக்னி வழிபாடு' முதன்மையாக இருக்கிறது. 'ஹோமத்தின்' மூலம் சம்பந்தப்பட்ட தெய்வ சக்திகளை, சில வழிமுறைகளை கையாள்வதன் மூலம் அக்னியில் எழுந்தருளச் செய்து, மந்திரப்பூர்வமாக பூஜை செய்து அருளைப்பெறும் வழிதான் 'ஹோமம்' என்று சொல்லலாம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனிப்பட்ட முறையில் மூல மந்திரம், வேத மந்திரம், காயத்ரி மந்திரம், பிரார்த்தனை மந்திரம் என்ற நான்கு வகை மந்திரங்கள் உண்டு. அவற்றை சரியான சப்த அதிர்வுகளில் உச்சாரணம் செய்து குறிப்பிட்ட தேவதா அம்சத்தின் தெய்வீக அலைகளை ஆகர்ஷணம் செய்து, கும்பத்தில் இருக்கும் புனித நீருக்குள் நிலைப்படுத்தப்படும்.

Covid 19: Aishwaryam Tharum 5 Homams At Sri Danvantri Arogya Peedam

உலகம் முழுவதும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதே வேத மந்திரங்களின் லட்சியம். அக்காலத்திலேயே வேத மந்திரங்கள் அனைத்தும் தனி ஒரு மனிதருக்காக மட்டுமல்லாமல், உலகம் அனைத்தும் க்ஷேமமாக இருக்கவேண்டும் என்றே பிரார்த்திக்கிறது. மக்களுக்கு ஏற்படும் வியாதிகள், இப்பிறவி, முற்பிறவிகளில் செய்த பாவங்களின் பலனாக ஏற்படும் இன்னல்கள், அபிசாரம் போன்றவற்றால் ஏற்படும் கஷ்டங்கள் ஆகியவற்றைப் போக்குவதற்கு செய்யப்படும் ஜபங்கள், ஹோமங்கள், பூஜைகள் எல்லாம் லோக க்ஷேமத்துக்காகவே இருக்கவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கவே விரும்புகிறோம். வியாதி அணுகாமல் இருக்கவும், வியாதியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறவும் விரும்பாதவர்கள் யாருமே இருக்கமுடியாது.

மிருத்யு பயம் ஏற்படும்போது, அனைவரும் அதிலிருந்து விடுபடவே விரும்புவார்கள். பலதரப்பட்ட வியாதிகளில் இருந்து விடுபடவும், சுகமாக 100 ஆண்டுகள் வாழவும் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் பலவிதமான மந்திரங்களும், ஹோமங்களும் உள்ளன.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! 'சதமானம் பவதி சதாயு புருஷ: அதாவது நோய் இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ்வதே சிறந்தது' என்றுதான் வேதமும் சொல்கிறது. மனித சரீரத்துக்கு பலவிதமான வியாதிகள் ஏற்படுகின்றன. உடல் உபாதைகள், பிறவியிலேயே ஏற்பட்ட ரோகங்கள், மற்றவர்களால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள், நீண்டகாலம் உள்ளேயே இருந்து முற்றிய நிலையில் வெளிப்படும் நோய்கள் எனப் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த ரோகங்கள் எல்லாம், 'ஜன்மாந்தர கிருதம் பாபம் வ்யாதிரூபேண ஜாயதே தச்சாந்தி: ஔஷதய்: தானை: ஜப ஹோம அர்ச்சனாதிபி:' முன் ஜன்ம பாவங்களின் விளைவாகவே மனிதர்களுக்கு வியாதிகள் ஏற்படுகின்றன என்றும், அவற்றிலிருந்து நிவாரணம் பெற மருந்தை உட்கொள்வது மட்டுமல்லாமல், ஜப, ஹோம, பூஜைகளையும் செய்யவேண்டும் என்றும் யோகரத்னாகரம் என்ற ஆயுர்வேத நூல் கூறுகிறது.

சிறப்பு வாய்ந்த மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அருள்மிகு ஆரோக்ய லஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள், அருள்மிகு மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள், ஸ்ரீ சரபேஸ்வரர், தத்தாத்ரேயர், அஷ்ட கால மஹா பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ வாக்தேவி சமேத பிரம்மா, ஸ்ரீ கார்த்திகை குமரன் போன்ற பல்வேறு தெய்வங்கள், மகான்கள், சித்தர்கள், குருமார்கள் எழுந்தருளி அருள்பாவிக்கின்ற தெய்வங்களின் முன்பு நடைபெறும மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் பங்கேற்பது பக்தர்களுக்கு மாபெரும் பலனை தரும் என்பது தின்னம்.

இதற்கான பூர்வாங்க பூஜைகள் 2.1.2022.ஞாயிறு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி நாளில் மகா கணபதி ஹோமத்துடன் நடைபெறுகிறது.

பிறந்தது புத்தாண்டு 2022 .. சமோவா, நியூசிலாந்தில் உற்சாகம்பிறந்தது புத்தாண்டு 2022 .. சமோவா, நியூசிலாந்தில் உற்சாகம்

English summary
In today's world of corona infections, it is important for everyone to live a long and healthy life. Five auspicious homas are held at Sri Dhanwantari Health Faculty on the eve of the English New Year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X