For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கடம் தீர்க்கும் தசரத சனி ஸ்தோத்திரம் - சனிக்கிழமை சொன்னால் கிடைக்கும் நன்மைகள்

சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்று தசரத மகாராஜாவின் கதை மூலமாக நாராதருக்கு விளக்கியுள்ளார் சிவபெருமான். இதை படிப்பதன் மூலம் சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். தோஷங்கள் நீங்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: கருப்பு உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் தசரத மகாராஜா கூறிய ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்து நமஸ்காரம் செய்பவர்களை நான் துன்பப்படுத்தமாட்டேன் என்று சனிபகவானே கூறியுள்ளார். சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீரவும் சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்று தசரத மகாராஜாவின் கதை மூலமாக நாராதருக்கு விளக்கியுள்ளார் சிவபெருமான். இதை படிப்பதன் மூலம் சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். தோஷங்கள் நீங்கும்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்திபெற்ற தர்பாராண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வாக்கிய பஞ்சாங்கப்படி மட்டுமே சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படி தான் கடந்த 2014, 2017ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்பட்டது.

Dasaratha Shani stotra remedy for Saturn related troubles

இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஒருசில கோவில்களில் ஜனவரி 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டது.
திருக்கணித பஞ்சாங்கம் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு பொருந்தாது. அதன்படி தற்போதைய சனிப்பெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. வழக்கமான பூஜை தான் நடைபெறும் என்று கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இருப்பினும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று வந்தனர். அவர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடிவிட்டு சனீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

சிவபெருமான் நாராதருக்கு சொன்ன கதை

சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்று தசரத மகாராஜாவின் கதை மூலமாக நாராதருக்கு விளக்கியுள்ளார் சிவபெருமான். இதை படிப்பதன் மூலம் சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். தோஷங்கள் நீங்கும். நாரத முனிவர் ஒருமுறை சிவபெருமானைப் பார்த்து, பகவானே என்ன செய்தல் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் இதை நீங்கள்தான் விளக்க வேண்டும் என்று கேட்டார், அதற்கு சிவபெருமான், நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள் ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்று கூறி சனியால் ஏற்படும் சங்கடங்களை வென்ற தசரத மன்னரின் கதையை கூறத் தொடங்கினார்.

ரகு குலத்தில் பிறந்த தசரதன் மகா பராக்கிரமசாலி. தசரதனின் ஆட்சி காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் காலம் வந்தது. சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

Dasaratha Shani stotra remedy for Saturn related troubles

அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் அமைச்சர்களையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார் அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். இதைத் தடுப்பது என்பது பிரம்மாவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.

ஆனால் தசரதன் சும்மா இருக்கவில்லை எப்படியாகிலும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக வஜ்ஜிரக்கவசம் தரித்து தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு நட்சத்திர மண்டலத்திற்குள் சென்றார்.

சூரிய மண்டலத்திற்கப்பால் வெகு துரத்தில் பிரகாசித்த ரோகிணி நட்சத்திரற்குப் பின் பாகத்தில் தன்னுடைய ரதத்தில் அமர்ந்தபடி அந்த நட்சத்திரத்தை பாதுகாத்தபடி பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.

அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான குதிரைகளோ கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது. தசரத சக்ரவர்த்தி ஆகாயத்தில் இன்னொரு சூரிய பகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் என வர்ணித்தார் சிவபெருமான்.

வில்லை வளைத்து காது வரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார். தேவர்கள்,அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான். ஆனாலும் சனியின் பார்வை தசரத சக்கரவர்த்தியை எதுவும் செய்யவில்லை.

Dasaratha Shani stotra remedy for Saturn related troubles

சனிபகவான் ஆச்சரிய புன்னகை புரிந்தபடி ராஜராஜனே, உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் யாரும் கிடையாது, என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள். நீ நிறைய புண்ணியங்களை செய்திருக்கிறாய். அதன் காரணமாகவே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்.

அதற்கு தசரத மகாராஜா, அந்த சனிபகவானே ஆச்சரியப்படும்படியான வரத்தை கேட்டார். ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உலக மக்களுக்கு எந்த துன்பத்தையும் தரக்கூடாது. சூரியர் சந்திரர் உள்ளவரைக்கும் எந்த காலத்திலும் அது நடக்கக்கூடாது என்று வரமாகக் கேட்டார். அதற்கு சனிபகவானோ, அவ்வாறே ஆகுக என்று கூறி வரம் கொடுத்தார்.

தசரத சக்ரவர்த்தியிடம் பேசிய சனிபகவான் உனக்காக மேலும் ஒரு வரம் கொடுக்கிறேன். என்ன வேண்டுமோ கேள் என்று சொன்னார், அப்போது தசரதன், ரோகிணிக்குள் பிரவேசிக்கும் போது கொடிய பஞ்சம் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர் அத்தகைய பஞ்சம் எந்த காலத்திலும் ஏற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அதற்கு சனிபகவான், அந்த வரம்தான் முதலில் கொடுத்து விட்டேன். மீண்டும் உனக்கான வரத்தைக் கேள், இந்த உலகம் உள்ளவரைக்கும் உன் புகழ் நிலைத்திருக்கும் என்று சொன்னார் சனிபகவான். வேறு வரத்தைக் கேள் என்று சொன்னார்.

தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..

நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச

நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம

நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச

நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே

நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம

நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே

நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே

நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச

அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய

நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம

ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே

துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...

இந்த ஸ்தோத்திரன் விளக்கம் :

கரியவனே, நீல நிறம் படைத்தவனே, நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன். புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே, சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடியவனே, மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞனக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.

சனிபகவானே, நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன். யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான். அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.

ஏ சனி பகவானே யாராக இருந்தாலும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும். யாரையும் கோபப்பார்வை பார்க்க வேண்டாம். உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.

மஹா பகவானும்,பயங்கரமனவனும்,கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , "ஏ ராஜேந்திரா, உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .

அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி இன்று முதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் .

அதைக் கேட்ட சனிபகவான் ,ஏ ராஜனே ,நீ கேட்ட வரம் சரியானதுதான் ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.

கருப்பு உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் துன்பப்படுத்தமாட்டேன்.

கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன். ஏ ரகுநந்தனா, உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார். தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினான்.

சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபார்கள். இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்.இதப் போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது. சனிபகவானே போற்றி போற்றி போற்றி.

English summary
Saturn or Shani enters the star constellation of Rohini once in every 30 years. This is one of the most dreaded transits of the kings and his kingdom. Hence the Dasaratha Shani stotra are considered an excellent remedy for Saturn related troubles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X