Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2021: குரு ஸ்தலங்கள் - பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் அதிக பலன் அடையப்போகிறார்கள். மீதமுள்ள ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம், கும்பம் மீனம் ராசிக்காரர்கள் குருபரிகார ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்தால் பாதிப்பு குறையும்.

நவக்கிரகங்களில் குருபகவானை 'புத்திர காரகன்' என்று ஜோதிட சாஸ்திரம் கூறும், புத்திர உற்பத்திக்குக் காரண கர்த்தா இவரே. குருபகவானின் அனுக்கிரகம் பெற்ற தலங்களில் தரிசனம் செய்து, வழிபட்டால் தடைகள் நீங்கி புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் குரு பரிகாரத்தலங்களில் தரிசனம் செய்யலாம்.

குருபகவான் முன்பாக நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும், அவற்றை நிறைவேற்றி நலம் பல பெற வைப்பார். குரு ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.

சுப கிரகம் குருபகவான்

சுப கிரகம் குருபகவான்

பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக் கிரகர். சாத்வீகம் கொண்டவர். மஞ்சள் நிறமானவர் என்பதால், இவரை பொன்னன் என்றும் அழைக்கப்படுகிறார். தயாள குணம் கொண்டவர்.

வெற்றி தரும் குரு விரதம்

வெற்றி தரும் குரு விரதம்

குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் 'மகா மகம்' நடக்கிறது. குரு பகவான் நீதிமானாக திகழ்கிறார். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.

நன்மை அடையும் ராசிகள்

நன்மை அடையும் ராசிகள்

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும். குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பகவான் கோச்சாரத்தில் சுற்றி வரும் போது அவர் ஒரு ராசியை 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். இந்த குரு பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நிகழப்போகிறது. குரு அமருவதைப் பொறுத்தும் பார்வையைப் பொறுத்தும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை அடையப்போகிறார்கள்.

குரு தரும் பலன்கள்

குரு தரும் பலன்கள்

குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யலாம். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

மேதா தட்சிணாமூர்த்தி

மேதா தட்சிணாமூர்த்தி

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மகாயாகம் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் குருபகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். இவரை வழிபட கல்வி செல்வமும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சி நாளில் சிறப்பு யாகங்களும் நடைபெற உள்ளது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பங்கேற்கலாம்.

தக்கோலம் குரு

தக்கோலம் குரு

சென்னை அருகில் பாடியில் வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம். இது குருபகவானுக்கு சிறந்த பரிகார தலமாகும்.

ராஜகுருவின் தரிசனம்

ராஜகுருவின் தரிசனம்

தஞ்சை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவனும் இறைவியும் அருள்புரிந்து வருகின்றனர். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குரு பகவானை வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி


திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாகும். இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை சமர்பித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.

காசிக்கு நிகரான தலம்

காசிக்கு நிகரான தலம்

மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானை வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று. இதே போல காஞ்சிபுரம் அருகே அகரம் கோவிந்தவாடியும் குரு பரிகார தலமாக திகழ்கிறது.

பட்டமங்கலம் குருபகவான்

பட்டமங்கலம் குருபகவான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் ஆலயங்களில் குருவிற்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குரு பெயர்ச்சி நிகழப்போகும் இந்த நேரத்தில் நேரில் சென்று குரு பகவானை தரிசனம் செய்யலாம்.

திருக்குருகூர் - ஆழ்வார் திருநகரி

திருக்குருகூர் - ஆழ்வார் திருநகரி


நவதிருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி குரு ஸ்தலமாகும். இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.

திருச்செந்தூர் குரு, தட்சிணாமூர்த்தி

திருச்செந்தூர் குரு, தட்சிணாமூர்த்தி

குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது. தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான முறப்பநாடு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது. இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். தாமிரபரணியில் நீராடி குருபகவானை வணங்க தோஷங்கள் நீங்கும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+