குரு பெயர்ச்சி பலன் 2023: கடன் தொல்லையால் மன அழுத்தம்..வியாழ பகவானை வணங்குங்கள் விடியல் வரும்
சென்னை:குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகம். வேலை, தொழில், திருமண வாழ்க்கை, குழந்தை பாக்கியத்திற்கு காரகர். குரு பகவான் இப்போது மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். கும்பம் ராசிக்கு 3வது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானின் 5ஆம் பார்வை களத்திர ஸ்தானம், 7ஆம் பார்வை பாக்ய ஸ்தானம், 9 ஆம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி விடியலை தரப்போகிறது. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கப்போகிறது.
கும்ப ராசிக்காரர்களே..உங்கள் ராசியில் ஜென்ம சனி பயணம் செய்கிறார். கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தலை கீழாக நின்று தண்ணீர் குடித்து பார்க்கறீர்கள். உங்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவி செய்ய வந்திருக்கிறார் குரு பகவான். மனதாலும் உடலாலும் சோர்வடைந்திருந்த கும்ப ராசிக்காரர்களுக்கு குருபகவான் தனது பரிபூரண அருளை வாரி வழங்கப்போகிறார்.

சொத்துக்களை இழந்து அதனால் உறவுகளையும் இழந்து நிர்கதியாக தவிக்கும் உங்களை காப்பாற்றி கரையேற்ற வந்துள்ளார் குருபகவான். குடும்ப வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். சனிபகவான் பார்வையும் உங்கள் ராசியில் மூன்றாம் வீடான மேஷ ராசியில் உள்ள ராகு குருவின் மீது விழுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் சேர்த்து வைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது அதற்கு காரணம் ஜென்ம சனிதான். சனிபகவானின் பார்வைதான்.
செய்யும் தொழிலில் சில சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். தொழில் பார்ட்டனர்களிடம் வார்த்தை மோதல்களை தவிர்க்கவும்.குரு பகவானின் பார்வை ஏழாம் வீட்டில் விழுந்தாலும் சனி பகவானின் பார்வையும் ஏழாம் வீட்டில் விழுவதால் திருமணம் சுப காரியம் நடைபெறுவதில் தடைகளை ஏற்படுத்துவார். பண விசயத்தில் யாரையும் எதிர்பார்க்காதீர்கள். பெரிய அளவில் செலவுகளும் வந்து போகும். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று எதிர்நோக்கக்கூடிய தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

குரு பகவானின் பார்வை லாப ஸ்தானமான 11ஆம் வீட்டின் மீது விழுகிறது. சம்பாதிக்கும் பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான நேரம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். ஏற்கனவே பட்ட அடி பல படிப்பினைகளை தந்திருக்கும். இனியும் பேராசைப்பட்டீர்கள் என்றால் பெரு நஷ்டம் ஆகி விடும். எடுத்து வைக்கும் அடி எல்லாம் சறுக்குதே என்னடா வாழ்க்கை இது என்று தனிமையான நேரத்தில் நினைத்து தவிப்பீர்கள். இனியும் தடுமாறாமல் இருக்க வியாழக்கிழமைகளில் குருபகவானை விடாமல் வணங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் விடியல் பிறக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications