பஞ்சமகா புருஷ யோகம்..பல ஆண்டுகளுக்குப் பின் கிரக கூட்டணி..வீடு தேடி வரப்போகும் ஜாக்பாட்
மாளவியா யோகமும், ஹம்ஸ யோகமும் கூடி வருவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பஞ்சமகா புருஷ யோகம் கைகூடி வரப்போகிறது.
சென்னை: மீன ராசியில் குருவும் சுக்கிரனும் இணைந்துள்ளது அற்புதமான பஞ்சமகா புருஷ யோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு சில ராசிக்காரர்களுக்கு ஹம்ச யோகத்தையும், உச்சம் பெற்ற சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகத்தையும் கொடுத்துக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள இந்த கிரகச் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு பணமழையை பொழியச்செய்யப்போகிறது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அவரது சொந்த ராசியான தனுசு ராசியிலேயோ, மீன ராசியிலேயோ இருந்தாலும், குரு பகவான் உச்சம் பெறும் ராசியான கடக ராசியிலே சஞ்சாரம் செய்தாலும் அந்த ஜாதகருக்கு ஹம்ச யோகம் ஏற்படுகிறது. ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு தனம், புத்திரபாக்கியம் அற்புதமாக அமையும். ஹம்சயோகம் வலுவாக அமையும் அந்த தசாபுத்தி காலத்தில் பலவித நன்மைகளை கொடுக்கும். லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெறும் போது இந்த யோகம் அமைகிறது. ஜாதக ரீதியாக ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு அம்சமான வாழ்க்கை அமையும்.

மாளவியா யோகம் மகத்தானது. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம் அல்லது துலாமில் ஆட்சியோ, மீனம் ராசியில் உச்சமோ பெற்றிருந்து அது கேந்திர ஸ்தான வீடுகளான 1,4,7,10 ஆம் இடமாக அமையப்பெற்றால் அந்த ஜாதகருக்கு மாளவியா யோகம் அமையும். இந்த மாளவியா யோகம் அமைந்த ஜாதகர்களுக்கு மண வாழ்க்கை அற்புதமாக இருக்கும், கும்ப ராசியில் சூரியன் சனி இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதனால் உருவாகியுள்ள அற்புதமான யோகம் சிலருக்கு ஜாக்பாட்டை தரப்போகிறது.
மிதுன ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்துள்ளனர். ஹம்ச யோகத்தால் உங்களுக்கு கல்வியிலும், வேலையிலும் நல்ல புரமோசன் கிடைக்கப்போகிறது. நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வந்துள்ளது. உயரதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான நல்ல நேரம் கைகூடி வந்துள்ளது.
கன்னி ராசிக்காரர்களே..குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் நேராக அமர்ந்து உங்களை பார்வையிடுகிறார். தனித்த குரு என்ற நிலையில் இருந்து இப்போது உச்சம் பெற்ற சுக்கிரனும் இணைந்து உள்ளது அற்புதமான யோகம். ஹம்ச யோகத்துடன் மாளவியா யோகமும் இணைந்துள்ளதால் உங்களுக்கு திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குருபகவானும், சுக்கிரபகவானும் இணைந்து யோகத்தை தருகின்றனர். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு, வாகனம் யோகம் கைகூடி வந்துள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம், வெளிநாடு செல்லும் யோகம் வந்துள்ளது. தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தை அள்ளிக்கொடுக்கப்போகிறது. தைரியமாக தொழில் தொடங்கலாம்.
கும்ப ராசியில் உள்ள சனி, சூரியன் சேர்க்கை புதுவிதமான யோகத்தை தந்துள்ளது. நீண்ட நாட்களாக முடங்கிப்போயிருந்த பணம் உங்கள் கைக்கு கிடைக்கப்போகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். நல்லதொரு வாய்ப்பினை விட்டுவிடாதீர்கள்.
மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்குள் ராசிநாதன் குரு பகவானும், சுக்கிரபகவானும் இணைந்து யோகத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். பணம் பல வழிகளிலும் வரும். புதிய தொழில் தொடங்குவதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வங்கிக் கடன் உங்களைத் தேடி வரும். தொழிலில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தருவதால் பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications