For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆனி திருமஞ்சனம்..ஜேஷ்டாபிஷேகம்.. ஆனி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்

ஆனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். ஆனி மாத பௌர்ணமி நாளில் காரைக்காலில் "மாங்கனித் திருவிழா' நடைபெறும்.

Google Oneindia Tamil News

மதுரை: ஆனி மாதத்தில் பல்வேறு முக்கிய விசேஷங்கள், விழாக்கள் நடைபெற உள்ளன. ஆனி திருமஞ்சனமும், ஜேஷ்டாபிஷேகமும் நடைபெற உள்ளது. எந்த நாளில் என்னென்ன விழாக்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

Important viratham days for the tamil month of Aani From June 15th to July 16th 2022

கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். ஆனி மாத பௌர்ணமி நாளில் காரைக்காலில் "மாங்கனித் திருவிழா' நடைபெறும்.

ஆனி மாதத்தில் என்னென்ன முக்கிய விழாக்கள் நடைபெற உள்ளது என்று பார்க்கலாம்.

ஆனி 11, கூர்ம ஜெயந்தி விழா. உருவு கண்டு இகழாமல், அதன் பெருமை கண்டு போற்ற வேண்டும் என்பதே கூர்ம அவதாரத்தின் நோக்கம். பணிவுகொண்டு மலை சுமந்த கூர்ம மூர்த்தி பாற்கடலில் இருந்து அனைத்தையும் மீட்டு கொடுத்தார். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு அரக்கர்களை அழிக்க பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் அவர் எடுத்த கூர்ம அவதாரம் யாரையும் அழிப்பதற்காக அல்ல. மேருமலையை மத்தாக கடையும் போது அதை தாங்கி நிற்பதற்காக எடுத்த அவதாரம் ஆகும். ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஆனி 16, வராஹி நவராத்திரி பூஜை ஆரம்பம்

ஆனி 22, ஆனித் திருமஞ்சனம், ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்த பின்னரும் ஆனி மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பத்தில் தகிக்கும் நடராஜர் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்

ஆனி 23, ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஜெயந்தி, ஆனி 24, வராகி நவராத்திரி பூஜை முடிவு, ஆனி 26, விஷ்ணு சயன ஏகாதசி

ப்ளான் பண்ணி தான் பண்ணோம்! போலீஸை அதிர வைத்த 'வாரிசுகள்’! கதறித் துடித்த பள்ளி மாணவி! என்ன திமிர்? ப்ளான் பண்ணி தான் பண்ணோம்! போலீஸை அதிர வைத்த 'வாரிசுகள்’! கதறித் துடித்த பள்ளி மாணவி! என்ன திமிர்?

ஆனி 27, ஜேஷ்டாபிஷேகம். ஆனி உத்திரம், ஆனி கேட்டை, ஆனி மூலம் சிறப்பு வாய்ந்தது. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

ஆனி 32, தட்சிணாயன புண்ணிய காலம்

English summary
Anithirumanjanam: (ஆனி மாதத்தில் சிவனுக்கு ஆனி திருமஞ்சனம் என்னென்ன விஷேசம்) Aani month important viratham days auspicies days This month there are many important specials including Chakratahlvar Jayanti, Jashtabhishekam, Anithirumanjanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X