• search

பாரத மாதா ஹோமம் - மாணவர்களின் கல்வி நலனுக்காக நான்கு ஹோமங்கள்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

   சென்னை: தன்வந்திரி பீடத்தில் மாணவ, மாணவியர்களின் கல்வித் தரம் உயர மாபெரும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமத்துடன் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி யாகங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற உள்ளது. 72 வது சுதந்திர தினவிழா முன்னிட்டு கொடியேற்றமும், பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமமும் நடைபெற உள்ளது.

  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது அன்னையின் வாக்கின்படி வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் நோய் தீர்க்கும் பீடமாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், பாரதமாதாவுடன் 75 பரிவார தெய்வங்களையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் பிரதிஷ்டை செய்து தினசரி யாகங்கள் செய்து வருகிறார்.

  Independence day Special prayer for bharatha matha

  பாரதத் தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும், இதுவரை எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழைவு பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற குழந்தைகளாக பாதுகாத்திடும் பூமித்தாய் என்கிற அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்து தேச நலமே தேக நலம், தேக நலமே தேச நலம் என்ற தாரக மந்திரத்துடன் தினசரி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

  வருகிற 15.8.2018 புதன்கிழமை 72 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காலை 10.00 மணியளவில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றம் மற்றும் பாரத மாதாவிற்கு ஹோமம், அபிஷேகம் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் நடைபெற உள்ளது.

  மாணவர்களின் கல்வி நலனுக்காக ஹோமம்:

  மாணவ, மாணவியர்களின் கல்வித் தரம் உயர மாபெரும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமத்துடன் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி யாகங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற உள்ளது. 14 வது வருடமாக 2018 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மற்றும் புதன்கிழமை சுதந்திர தினத்தன்று, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட நான்கு ஹோமங்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, வித்தை, குரு கடாட்சம், சுபயோகம், ரோகமின்றி நல்ல உடல் ஆரோக்கியம், கிரக தோஷமின்றி வாழவும், மேலும், பல நல்ல பலன்களை பெற உதவும் வகையிலும் மாணவ, மாணவியர்கள் கல்வியில் தேர்ச்சி பெறவும், உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும் நடைபெறுகிறது.

  கோ பூஜை, யாகசாலை பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீ ம்ருத்யஞ்ஜ ஹோமம், ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் ஹோமம், ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி ஹோமங்கள் நடைபெற்று, பூர்ணாஹுதி நடைபெறும். ஹோமம் நிறைவு பெற்ற உடன் அதற்குரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த எழுது பொருட்கள் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படும். தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Special prayer for bharatha matha flag hoisting will be conduct special homam on Independece day at Sri Davanthri arokya peedam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more