சர்வதேச முத்த தினம்: முத்தம் தர ஏற்ற இடம்... எந்த ராசிக்காரர்கள் எப்படி முத்தம் கொடுப்பதில் கில்லாடி
அன்பையும் காதலையும் எளிதாக புரியவைக்கும் மொழி முத்தம். சர்வதேச முத்த தினமான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் எப்படி முத்தம் தருவார்கள் என்று பார்க்கலாம்.
மதுரை: முத்தத்தை கொடுத்தாலும் சரி அன்பானவர்களிடம் இருந்து முத்தத்தை வாங்கினாலும் சரி உடலும் மனமும் உற்சாகம் பூசிக்கொள்ளும். காரணம் முத்தத்தினால் ரத்த அணுக்களின் ஒவ்வொரு செல்லும் உற்சாகமடைகிறது. அன்பான முத்தம் தொடங்கி மருத்துவ முத்தம் வரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய முத்தங்கள் உள்ளன. முத்தத்தை பரிமாறிக்கொள்வதில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தனி ஸ்டைல் உண்டு. காதலின் மொழியான முத்தத்தை எந்த ராசிக்காரர்கள் எப்படி கொடுப்பார்கள் என்று சர்வதேச முத்த தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் பார்க்கலாம்.
கன்னத்தில் கொடுக்கப்படும் முத்தத்தை விட நெற்றியில் கொடுக்கப்படும் முத்தம் உண்மையில் மிக சிறந்த ஒன்று. நெற்றி முத்தம் பொறுத்தவரை பெற்றோர்கள்,குழந்தைகள், நண்பர்கள் வாழ்க்கை துணைவர் என இவர்களுக்கு அன்பான நெற்றி முற்றம் கொடுக்கப்படுகிறது. வயதான காலத்தில் பெற்றவர்களுக்கு பணம் கொடுத்து மருந்து மாத்திரை வாங்கிக் கொடுப்பதை விட அவ்வப்போது முத்தம் கொடுத்தாலே அவர்களின் நோய் எளிதில் குணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அன்பானவர்களுக்கு முத்தம் கொடுப்பது அவர்களிடம் இருந்து முத்தத்தை பெறுவதன் மூலம் காதல் ஹர்மோனான ஆக்ஸிடோசின் சுரப்பு தூண்டப்பட்டு மனதில் அன்பு, கருணையை அதிகரிக்கச் செய்கிறது. தலைவலி, உடல் சோர்வு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை முத்தம் குணமாக்குகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் எங்கு எப்படி முத்தம் கொடுப்பார்கள் என்று பார்க்கலாம்.

அன்பான முத்தம்
நெருப்பு ராசியான மேஷத்தின் அதிபதி செவ்வாய். ரத்தம் முழுவதும் காதலை உணரவைப்பார். சாகசக்காரர்கள். முத்தத்தின் மூலம் நச்சென்று காதலை உணரவைத்து விடுவதில் இவர்கள் கில்லாடி. சரியான நேரம், இடம், ரொமான்டிக்கான மனநிலை அமைந்தால் அதை தவற விடமாட்டார். அன்பை முத்தம் கொடுத்து உணர வைத்து விடுவார்கள்.

உதட்டு முத்தம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவ ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் காதல் மனநிலையில் இருப்பார்கள். அடிக்கடி முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வார்கள். காதல் கலையில் இவர்கள் கில்லாடிகள். சத்தமிடாமல் முத்தமிடுவதில் இவர்கள் சாகசக்காரர்கள். நெருக்கமான தருணங்களில் தங்களின் அன்பானவர்களுக்கு அடிக்கடி உதட்டில் சூடாக ஒரு முத்தத்தை நச் என்று கொடுத்து விடுவார்கள்.

கன்னத்தில் முத்தம்
புத்தி நாதன் புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் அறிவாளிகள். உலகத்தையே மறந்து தங்களின் அன்பானவர்களையும் முத்தத்தினால் மறக்கடித்து விடுவார்கள். கன்னத்தில் கொடுக்கும் மிகச்சிறிய முத்தத்தையும் கலை நயத்தோடு தருவதில் இந்த ராசிக்காரர்கள் கில்லாடி.

சிலிர்க்கும் முத்தம்
சந்திரன் காதல் நாயகன், மனோகாரகன். சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு முத்தம் கைவந்த கலை. மனதாலும் உடலாலும் முத்தத்தால் குளிர வைப்பதில் கில்லாடிகள். கைகளினால் தங்களின் அன்பானவர்களை அடிமைப்படுத்தி கண்கள், காது மடல், கழுத்து என விதம் விதமாக ரகம் ரகமாக முத்தம் கொடுத்து உடல் முழுவதும் சிலிர்ப்பை ஏற்படுத்திவிடுவார்கள்.

உஷ்ண முத்தம்
சிம்ம ராசிக்காரர்கள் காதலில் தீயாக செயல்படுபவர்கள். நெற்றியில் தொடங்கி உதடு வரை முத்தத்தினால் முழுவதுமாக வசப்படுத்திவிடுவார்கள். காதல் துணையை எப்போதும் முத்தத்தினால் ஈர்த்து தங்களின் வசம் தக்கவைத்துக்கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் தரும் முத்தத்தில் உஷ்ணம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

அன்பான முத்தம்
அறிவின் ஆற்றல் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் தரும் முத்தம் வித்தியாசமானதாக இருக்கும். அன்பானவர்களுக்கு முத்தம் கொடுக்கும் போது வித்தியாசமான முறைகளை கையாளுவார்கள். இவர்களின் முத்தம் தனித்துவமானதாக இருக்கும். அதே நேரத்தில் ரசனை அள்ளும்.

ரசனை முத்தம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் ரசனையானவர்கள். அன்பானவர்களுக்கு அசராமல் முத்தம் கொடுப்பதில் வல்லவர்கள். இவர்கள் விரும்பி கொடுக்கும் முத்தத்தை விட இவர்களைத் தேடி விரும்பி வரும் முத்தம்தான் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முத்தமும் ரசிக்கும்படியாக இருக்கும்.

மருத்துவ முத்தம்
வீரத்தின் நாயகன் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமான முத்தத்தில் ஆர்வமுடையவர்களாக இருப்பீர்கள். அன்பானவர்களுக்கு முத்தங்களை கொடுப்பதில் நீங்கள் வல்லவர்கள். முத்தமிடுவதற்காக யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க மாட்டீர்கள். மருத்துவ முத்தமாக மாற்றுவதில் கில்லாடி நீங்கள்.

பரவச முத்தம்
நெருப்பு ராசியான தனுசு ராசியில் பிறந்த நீங்கள் சுவாரஸ்யமான முத்தம் கொடுப்பதில் கில்லாடி. ஆழமான அழுத்தமான முத்தம் கொடுத்து அசத்துவீர்கள். உங்களிடம் இருந்து எதிர்பாராத வகையில் உங்கள் அன்பானவர்களுக்கு முத்தம் கிடைக்கும். உங்களுடைய முத்தம் பெறுபவர்களைப் பரவசப்படுத்தும்.

தரமான முத்தம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள். நிமிடத்திற்கு நிமிடம் வித்தியாசமாக முத்தம் கொடுப்பதில் கில்லாடி. சுவாரஸ்ய முத்தங்களை கொடுத்து அன்பானவர்களை அசத்துவார்கள். முத்தம் கொடுத்தாலும் சரி பெற்றாலும் சரி தரமாக இருக்கும்.

வெப்ப முத்தம்
சனி பகவானை ராசி நாதனகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் மென்மையானவர்கள். அன்பானவர்களுக்காக உருகி உருகி முத்தம் கொடுப்பார்கள். நீங்கள் கொடுத்து உதட்டு முத்தத்தினால் உங்கள் அன்பானவர் வெப்பத்தில் தகித்து விடுவார்கள். உங்களைப் போலவே நீங்கள் கொடுக்கும் முத்தமும் மென்மையானதாக ஆழமானதாக இருக்கும்.

ஆழமான முத்தம்
மீன ராசிக்காரர்கள், குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட இவர்கள் மற்ற ராசிக்காரர்களை விட முத்தம் கொடுப்பதில் சிறந்தவர்கள். ரசனையான முத்தங்களைக் கொடுத்து முத்தக்கடலில் மூழ்கடிப்பதில் கெட்டிக்காரர்கள். துணையிடம் தனது அன்பை நிலை நிறுத்த ஆழமாக முத்தமிடுவதில் வல்லவர்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications