For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை கடைசி சோமவாரம் : சிவ ஆலயங்களில் 1008 சங்காபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் நடைபெறும் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகத்தை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மதுரை: கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இம்மையில் நன்மை தருவார் ஆலயங்களில் நடைபெறும் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கார்த்திகை மாதத் திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று சிவபெருமானை தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று இந்த திங்கட்கிழமையில் சிவ ஆலயங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். இந்த நாளில், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார்.கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பைச் சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

சிவனுக்கு சங்காபிஷேகம்

சிவனுக்கு சங்காபிஷேகம்

சோமவார நாளில் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள். சங்காபிஷேகம் சிவாலயங்களில் நடைபெறும். சில கோயில்களில் 108 சங்காபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறாலாம். சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் சிவனுக்கு நடைபெறும் சங்காபிஷேகத்தை தரிசிக்க மக்கள் கோவில்களுக்கு சென்றுள்ளனர்.

சிவனுக்கு விரதம்

சிவனுக்கு விரதம்

சோமவார விரதம் எப்படிப்பட்டது என்பதை சிவனே சொல்கிறார். சோமன் என்றால் சந்திரன், அவனுக்கு உரிய தினம் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

சந்திரனுக்கு பெருமை

சந்திரனுக்கு பெருமை

சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட பார்வதிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று ஸ்வாமி சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன? என்று பரமனிடமே கேட்டாள் பார்வதி. எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும் தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினாள்.

சிவனுக்காக விரதம்

சிவனுக்காக விரதம்

அதன்படி, சிவபெருமானே, பார்வதி தேவிக்கும் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களுக்கும் இந்த விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார் என்கிறது புராணம்.திங்கட்கிழமையில் அதிகாலையில் குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். அந்தணரை தம்பதியாய் வரவழைத்து, அவர்களையே பார்வதி, பரமேஸ்வரனாக பாவனை செய்து அவர்களுக்கு தானம் அளித்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.

தம்பதியர் ஒற்றுமை

தம்பதியர் ஒற்றுமை

சித்திரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் தனது 14 வயது முதல் சோமவார விரதத்தை கடைபிடித்து வந்தால் அவளுக்கு சந்திராங்கதன் என்ற இளவரசனை மணம் செய்து வைத்தனர். அவன் நண்பர்களுடன் படகில் யமுனை நதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்து அனைவரும் மரணமடைந்தனர். நண்பர்களோடு நாகர் உலகம் சென்று அங்குள்ள நாக மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்தான்.

விபத்தில் சிக்கி சந்திராங்கதன் இறந்துவிட்ட செய்தி கேட்டு அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்தனர். சீமந்தினி விதவைக் கோலத்தில் இருந்தவாறே யமுனை நதிக்கரையில் சோமவார விரதத்தை கடைபிடித்தாள். அப்போது நாக மன்னனிடம் முறையாக நடந்து நல்லபெயர் பரிசுப் பொருட்களை பெற்றுத் திரும்பினான் சந்திராங்கதன், தன் மனைவியை விதவை கோலத்தில் கண்டு அதிர்ந்த அவன், நடந்ததைக் கூறி அவளை மீண்டும் திருமணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபட்டான். சிவனுக்காக இந்த விரதம் இருந்தால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்.


English summary
Today Karthigai Kadaisi Somavaram, Lord Shiva devotees in the month and special pujas and rituals are held in Shiva temples in maintained by Tamil community
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X