For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குன்றத்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் - விண்ணை எட்டிய அரோகராக முழக்கம்

அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் நடந்தேறிய குன்றத்தூர் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்

Google Oneindia Tamil News

சென்னை: குன்றத்தூர் முருகன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணை எட்டியது.

Recommended Video

    அரோகரா! Kundrathur Murugan Temple Maha Kumbabhishekam | Oneindia Tamil

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்தா.மோ. அன்பரசன் உட்பட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

    நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம்! ஆண்டுக்கு இனி 6 முறை கிராம சபை கூட்டங்கள்! முதலமைச்சர் அறிவிப்பு! நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம்! ஆண்டுக்கு இனி 6 முறை கிராம சபை கூட்டங்கள்! முதலமைச்சர் அறிவிப்பு!

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மிகவும் சிறப்பு வாய்ந்த குன்றத்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு குடி கொண்டிருக்கும் தமிழ் கடவுளான முருகப் பெருமான் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    குன்றத்தூர் முருகன் கோவில்

    குன்றத்தூர் முருகன் கோவில்

    திருக்கோவில்களில் ஆகம விதிகளின்படி ஆண்டுக்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று பிரசித்தி பெற்ற குன்றத்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக வெகு விமரிசையாக நடைபெற்றது.

    யாகசாலை பூஜைகள்

    யாகசாலை பூஜைகள்

    12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலைத்துறை முடிவெடுத்த நிலையில் 2 கோடி மதிப்பில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் கோவில் கோபுரங்கள், கலசங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன. கடந்த 20ம் தேதியன்று யாக சாலைகள் , அலங்காரங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கோபுரத்தில் புனித நீர்

    கோபுரத்தில் புனித நீர்

    ராஜகோபுரத்தின் மீதும் , மூலவர் கோபுரம் உள்ளிட்ட பிற கோபுரங்களிலும், கலசங்களிலும் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது . மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

    பக்தர்கள் அரோகரா முழக்கம்

    பக்தர்கள் அரோகரா முழக்கம்

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று கந்தனுக்கு அரோகரா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    English summary
    The Maha Kumbabhishekam was held today at the Kunrathur Murugan Temple. Crowds of devotees participated and performed Sami darshan. While pouring holy water on the coffin of the tower, the slogan 'Arogara' reached the sky for Vetrivel Murugan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X