சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் பஞ்சு, சோழி வைத்து பூஜை - ஜவுளித்தொழில் சிறப்படையுமா?
சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவு பெட்டியில் இளவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோளி ஆகியன வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி ஆகியன வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. ஜவுளித்தொழில் ஏற்றம் பெருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன் மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.
சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது. முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார்.
"சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்." என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

நோய் தீர்க்கும் ஆலயம்
திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது. இங்குள்ள நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆண்டவன் உத்தரவுப்பெட்டி
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் குறிப்பிடும் பொருள், இந்தப் பெட்டியில் வைத்து பூஜிப்பது, வழக்கமாக உள்ளது. முருக கடவுள், பக்தர்கள் கனவில் தோன்றி தெரிவிக்கும் பொருட்களை வைத்து பூஜை செய்து, பின்னர் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள தூணில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம்.

மக்களின் நம்பிக்கை
இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றமும், பெறலாம், இறக்கமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக, இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் கவனித்து வருகின்றனர்.

உப்பு, நாணயம்
கடந்த 3ஆம் தேதி உத்தரவுப் பெட்டிக்குள் லிங்கம், உப்பு, நாணயம் ஆகியவை வைத்து, பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பானுமதி என்ற பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி, நேற்று இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, எதிர்காலத்தை கணிக்க பயன்படுத்தும் சோளி ஆகியன வைத்து வழிபாடு நடைபெற்றது.

பஞ்சும் சோழிகளும்
இதனை தொடர்ந்து, கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு, புதிதாக இருவிதமான பஞ்சுகளும், சோளிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டன. இறைவன் மற்றொரு பக்தர் கனவில் தோன்றி தெரிவிக்கும் வரை இந்த பொருட்கள் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல் விலை உயர்வு
தமிழகத்தில் பஞ்சு, நூல் விலை உயர்வினால் ஜவுளித்தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் பருத்தி நூல் தவிர வேறு நூலுக்கு மாற தயாராகி வருகின்றனர். எனவே செயற்கை நூலில் ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதின் அவசியத்தை இந்த பொருட்கள் உணர்த்துவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர். கடலில் இருந்து உருவாகும், சங்கு, சிப்பிகள், முத்து போன்ற பொருட்களின் வணிகமும் மேம்படும். சோழி உத்தரவாகி உள்ளதால், பிரசன்னம், ஜோதிட கணிப்புகளும், ராகு - கேது பெயர்ச்சி பலன்களும், நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாகவும் சிவாச்சாரியார்கள் கூறியுள்ளனர்.

மாற்றம் தரும் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் இதற்கு முன்பு ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் வைத்து பூஜை செய்த போது இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டது. மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படைந்தது. மற்றொரு முறை மண் வைத்து வழிபட்ட போது குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பேரழிவு உருவானது. மஞ்சள் வைத்து பூஜை செய்த போது தங்கம் போல மஞ்சள் விலை உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி ஏற்பட்டது. பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோதுதான் கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications