For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேது கிரஹஸ்த முழு சந்திர கிரகணம்...எங்கு தெரியும்? - தோஷத்திற்கு என்ன பரிகாரம்

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: வைகாசி மாதம் 2ஆம் தேதி திங்கட்கிழமை மே 16ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் காலை 07.57 மணி முதல் பகல் 11.25 மணி வரை விசாகம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த சந்திர கிரகணமாகும்.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்பட்டது. இது நம் நாட்டில் காணப்படவில்லை. அப்படி என்றால் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் உருவாகி 15 நாட்களுக்குப் பிறகு நிகழ்கிறது. இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. முதல் சந்திர கிரகணம் 2022 இல் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 16ஆம் தேதி அன்று நிகழும். அது முழு சந்திர கிரகணம்.

இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று..இந்தியாவில் தெரியுமா? -என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது? இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று..இந்தியாவில் தெரியுமா? -என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?

கேது கிரஹஸ்த சந்திர கிரகணம்

கேது கிரஹஸ்த சந்திர கிரகணம்


ஜோதிடப்படி 2022 இல் வரும் இரண்டு சந்திர கிரகணங்களும் முழு சந்திர கிரகணங்கள் ஆகும். இந்தியாவில் உள்ள மத நம்பிக்கைகளின்படி.. கிரகணத்தின் பலன் சிலருக்கு நன்றாக இருந்தால்.. சிலருக்கு அது மோசமான விளைவை ஏற்படுத்தும். முதல் சந்திர கிரகணம் உலகின் பல நாடுகளில் காணப்படவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் தாக்கம் இந்திய மக்களுக்கு குறைவாகவே இருக்கும்.

 முதல் சந்திர கிரகணம் எப்போது?

முதல் சந்திர கிரகணம் எப்போது?

ஜோதிட சாஸ்திரப்படி.. நமது நாட்டில் சூரிய, சந்திர கிரகணங்கள் மிகவும் முக்கியமானவை. கிரகணத்தின் போது பல செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16, 2022 திங்கட்கிழமை இந்திய நேரப்படி இது காலை 07:02 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடையும். அது முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

சந்திர கிரகண நேரம்

சந்திர கிரகண நேரம்

பகல் நேரத்தில் சந்திர கிரகணம் நிகழ்வதால் அதன் பாதிப்பு நம்மீது இருக்காது. எனவே இந்தியாவில் உள்ள தோஷ காலத்திற்கு பொருந்தாது. இந்தியாவில் சந்திர கிரகணம் தெரியவில்லை என்றாலும்.. யாராவது பார்க்க விரும்பினால்.. ஆன்லைனில் பார்க்கலாம். பல யூடியூப் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

முழு சந்திர கிரகணம் எங்கு தெரியும்?

முழு சந்திர கிரகணம் எங்கு தெரியும்?

தென்மேற்கு ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் முதல் சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது.

சந்திர கிரகணத்தின் போது தோஷ காலம்

சந்திர கிரகணத்தின் போது தோஷ காலம்

சந்திர கிரகணத்தின் தோஷ காலம் கிரகணத்திற்கு 09 மணி நேரத்திற்கு முன் தொடங்கும். இருப்பினும், சந்திர கிரகணம் தெரியும் இடத்தில் மட்டுமே தோஷ காலம் செல்லுபடியாகும். சந்திர கிரகணம் தெரியாத நாட்டில் தோஷம் ஏற்படாது.

 கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது

கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது

கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுவதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மெற்கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

English summary
A full lunar eclipse will occur on Monday, Vaikasi 2nd, May 16. This lunar eclipse is the Ketu planetary lunar eclipse which occurs from 07.57 am to 11.25 pm in the star Visakha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X