Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரிய தடைகளை ஏற்படுத்தும் நவகிரக தோஷங்கள் - இந்த பரிகாரங்களை செய்யுங்கள் வெற்றி கிடைக்கும்

எந்த காரியத்தை எடுத்தாலும் சிலருக்கு தடைகளும் தாமதங்களும் ஏற்படும். தொழில் நஷ்டம் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட கிரக தோஷங்களே காரணமாகும். சில பரிகாரங்களை செய்தால் தோஷங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். நவகிரகங்கள்தான் பலருக்கும் நன்மை தீமைகளை அளித்து வருகின்றன. நவ கிரகங்களினால் தோஷங்கள் இருந்தால் பலருக்கும் காரிய தடைகள் ஏற்படும். தொழிலில் எதை தொட்டாலும் நஷ்டமாகவே இருக்கும். இந்த தோஷங்கள் நீங்க சில பரிகாரங்களை செய்யலாம். குல தெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும் காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே ருசிப்பவர்கள் அதைக்கண்டு துவண்டு விடாமல் இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு மாற வேண்டும். நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். இல்லாதவர்களுக்கும் பசியோடு இருப்பவர்களுக்கும் தானம் செய்தால் உங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறையும்.சனிக்கிழமையில் அன்னதானம் செய்வதன் மூலம் நவ கிரக தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் உண்டாகும்

நவகிரக தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் நவதானியத்தால் செய்யப்பட்ட தோசையை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுங்கள். நவதானிய தோசையை சனிக்கிழமை செய்து சாப்பிட்டால் நவ கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் உண்ணும் உணவு, தானமாக கொடுக்கும் பொருட்களினாலும் தோஷங்கள் நீங்கும். எந்த தோஷம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன தானமாக கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.

சூரியன்

சூரியன்

ஒரு நபருக்கு ஜாதகத்தில் சூரிய பலமற்ற அல்லது சாதமற்ற இடத்தில் இருந்தால், சூரியனை தினமும் வணங்குதலும், சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரியனுக்கு உரிய காயத்ரி மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். இது சூரியனால் ஏற்படக்கூடிய கெடுபலன்களிலிருண்டு தப்பிக்க வழி கொடுக்கும். சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்து தானமாக கொடுத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

சந்திரன்

சந்திரன்

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் குறைபாடு இருந்தால், மன நல பாதிப்புகள் குழப்பங்கள் ஏற்படும். நல்ல காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். நீங்கள் திங்கட்கிழமைகளில் சிவனை வணங்க வேண்டும். சந்திர பகவானுக்கு நெல் அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது. சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தையும் உச்சரித்து திங்கட்கிழமைகளில் அன்னதானம் தர சந்திர தோஷங்கள் நீங்கும். ஒருமுறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வரலாம்.

செவ்வாய்

செவ்வாய்

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் சாதகமற்ற நிலையில் இருந்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும். நினைத்த காரியம் கை கூடாது. செவ்வாய்க்கிழமைகளில் ஏழைகளுக்கு அடிப்படைத் தேவையான பொருட்களை வாங்கித்தரலாம். இனிப்புகளை வழங்கலாம். செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும். செவ்வாய்க்கிழமை சுந்தர காண்டத்தைப் படிப்பதால் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் நீங்கும்.

புதன்

புதன்

உங்கள் ஜாதகத்தில் புதன் குறைபாடு இருந்தால் உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். இதை சரிசெய்ய, செம்பினால் செய்யப்பட்ட காப்பு கைகளில் அணிய வேண்டும். புதனுக்கு உரிய பச்சை பயிறு தானியத்தை வைத்து வணங்கினால், ஜோதிட கலையில் புகழ் பெறலாம், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம். விநாயகரை வணங்குவதன் மூலமும், பசுவுக்குக் கீரை கொடுப்பதன் மூலம் புதன் பகவானால் ஏற்படக்கூடிய குறைபாடுகள், பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு புதனின் அருள் கிடைக்கும்

குரு

குரு

ஜாதகத்தில் குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் நவகிரகங்களில் குருவை வணங்க வேண்டும். மஞ்சள் நிற பொருட்களைத் தானமாக வழங்க வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற துணியை சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானது. குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும். திருமணம் நடைபெறும், புத்திரபாக்கியம் கிடைக்கும்.

சுக்கிரன்

சுக்கிரன்

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் வெள்ளை நிற பொருட்களை தானமாக வழங்க வேண்டும். பச்சரியை தானம் செய்வது மிகவும் நல்லது. தினமும் லட்சுமி தேவியை வணங்க வேண்டும். சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம். சுக்கிர பகவானால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சனி

சனி

ஜாதகத்தில் சனி சாதகமற்ற இடத்தில் இருந்தால், நீங்கள் எல்லாவற்றையும் இழப்பீர்கள். அஷ்டம சனி, ஏழரை சனியால் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டால் சனியால் ஏற்பட்ட தோஷம் தீர சில பரிகாரங்களை செய்யலாம். சனி பகவானுக்குரியது எள். சனிக்கிழமை எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும். சனிக்கிழமைகளில் சனிபகவானின் பாதங்களைப் பார்த்து விளக்கை ஏற்றி வைக்கவும். அனுமன் சாலிசாவையும் பாடி வர சனி பகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் நீங்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானின் பாதங்களைப் பார்த்து விளக்கை ஏற்றி வைக்கவும். அனுமன் சாலிசாவையும் பாடி வர சனி பகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் நீங்கும்.

ராகு

ராகு

ஜாதகத்தில் ராகு சரியில்லாத நிலையில் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, புகழுக்கு களங்கம் ஏற்படுவது, தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி சுமத்தல், குடும்பப் பிரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் வரும். இந்த பாதிப்புகள் நீங்கவும் ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. ராகு பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை ராகு பகவானுக்கு உண்டு. சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45 மணிக்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள் பாதிப்புகள் நீங்கும்.

கேது

கேது

கேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக இல்லாமல் இருந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, மனகுழுப்பம் ஏற்படும். சமூகத்தில் பெயர் புகழ் கெடுவது, குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம் ஏற்படும். கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும். விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர். சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வரலாம். கேது பகவான் ஞானகாரகன் என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும். குல தெய்வத்தை அடிக்கடி மனதார வேண்டுக்கொள்ளுங்கள் எத்தகைய தோஷமும் எளிதில் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+