For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முழு சந்திரகிரகணம் : யாருக்கு தோஷம்... பரிகாரம் பற்றி பஞ்சாங்கம் சொல்வதென்ன?

இன்று பௌர்ணமி திதியில் உத்திராடம் 4ஆம் பாதம் மகரம் ராசியில் சந்திரகிரகணம் நிகழ உள்ளது. வெள்ளிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, உத்திரம், பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

Google Oneindia Tamil News

சென்னை: விளம்பி வருடம் ஆடி 11ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெளிவாக தெரியும். இந்த சந்திரகிரகணம் பற்றி பஞ்சாங்கத்தில் யாருக்கு தோஷம், எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

பௌர்ணமி திதி, உத்திராடம் நட்சத்திரம் 4ஆம் பாதம் மகரம் ராசி மேஷம் லக்னத்தில் கேது கிரகஸ்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. தென்மேற்கே பூர்ண சந்திர கிரகணம் பிடித்து வடகிழகே பௌர்ணமியில் பூர்ண சந்திரகிரகணம் பிரதமையில் விடுகிறது.

இரவு 11.54 மணிக்கு சந்திர கிரகணம் பிடிக்கிறது. மத்திய காலம் இரவு 1.52 மணிக்கு நீடிக்கிறது. 28ஆம் தேதி அதிகாலை 3.49 மணிக்கு கிரகணம் முடிகிறது.

எந்த இடத்திற்கு பாதிப்பு

எந்த இடத்திற்கு பாதிப்பு

சந்திர கிரகணத்தினால் வைசியர்களுக்கு கெடுதி என்றும் இமாசல பிரதேசம், சீனா, பாகிஸ்தான், மழையால் பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன விலங்களுக்கு பாதிப்பு என்றும் வீண் பிரச்சினைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பரிகாரம் யாருக்கு

பரிகாரம் யாருக்கு

வெள்ளிக்கிழமை பிறந்தவர்களும் கார்த்திகை, உத்திரம், பூராடம், உத்திராடம், திருவோணம், நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

சாப்பிட வேண்டாம்

சாப்பிட வேண்டாம்

கிரகண காலத்தில் சாப்பிட வேண்டாம். இரவு உணவுகளில் ஊறுகாய், உப்பு போன்ற பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும். 28ஆம் தேதி சனிக்கிழமையன்று பிரதமை சிரார்த்தம் செய்து கொள்ள வேண்டும்.

சந்திரனை பார்க்க வேண்டாம்

சந்திரனை பார்க்க வேண்டாம்

கர்ப்பிணிகள் இன்று இரவு 11.45 மணி முதல் 28ஆம் தேதி அதிகாலை 3.55 வரை சந்திரனை பார்க்கக் கூடாது. கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு சந்திரனை தரிசனம் செய்யலாம். கோவில்கள், வீடுகள் சுத்தம் செய்த பின்னர் குளித்து விட்டு அனைவரும் கோவில்களுக்கு போகலாம்.

English summary
Easy remedies during lunar eclipse for protection from negative effects of lunar eclipse/chandra grahan dosha in horoscope of individuals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X