சூரியனார் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம் - சூரியபகவான் திருக்கல்யாணம்
ரத சப்தமி அன்று தஞ்சை சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடைபெறும்.
தஞ்சாவூர்: நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படுவது கும்பகோணம் அருகேயுள்ள சூரியனார்கோயில் இங்கு ரத சப்தமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியபகவான், உஷாதேவி, பிரத்யுஷாதேவி திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.
Recommended Video
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படுவது கும்பகோணம் அருகேயுள்ள சூரியனார்கோயில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இத்திருக்கோயிலில், சூரியபகவான், உஷாதேவி, பிரத்யுஷாதேவி ஆகிய இரு மனைவியர்களுடன், திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எப்படி அமைந்துள்ளதோ அதேபோல இத்திருக்கோயிலில் அனைத்து நவக்கிரகங்களும் தனித்தனி சன்னதி கொண்டு தங்களுக்குரிய ஆயுதமோ, வாகனமோ இன்றி சாந்த சொரூப கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்
இத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் ரதசப்தமி விழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா கடந்த மாதம் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பிரகார உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 7ஆம் நாளான சனிக்கிழமையன்று இரவு சிவசூரியபெருமானுக்கு உஷாதேவி மற்றும் பிரத்தியுக்ஷா தேவியுடன் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவத்தின் முதற்கட்டமாக நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவசூரியபெருமான் விசிறி, குடையுடன் காசியாத்திரை செல்லுதல் மற்றும் சீர்வரிசைகளுடன் மாப்பிள்ளை அழைப்பும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இரு தேவியருடன் மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது.
பின்னர் சுவாமிகள் ஊஞ்சலில் வீட்டிருக்க நலுங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவமும் அதனையடுத்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் கூறி, யாகம் வளர்த்து திருமாங்கல்ய தாரணமும் கோபுர ஆர்த்தி மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications