விருத்தகிரீஸ்வரர் கோவிலில் களவுபோன கலசங்கள் மீட்பு - மீண்டும் குடமுழுக்கு
விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் களவு போன கோபுர கலசங்கள் மீட்கப்பட்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விருத்தாசலம் : புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் களவு போன கோபுர கலசங்கள் மீட்கப்பட்டு மீண்டும் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்து 28 நாட்கள் ஆன நிலையில் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்களை மார்ச் மாதம் 1-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். அந்த கலசங்கள் மீட்கப்பட்டு தற்போது ஆலயத்தில் மீண்டும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. புதிதாக புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் 6-ம் தேதி இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலில் உள்ள 5 கோபுரங்களிலும் கலசங்கள் உள்ளன. இதில், மூலவர் மற்றும் விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரங்களில் மட்டும் குடமுழுக்கை ஒட்டி தங்க முலாம் பூசிய கலசங்கள் வைக்கப்பட்டன. அந்த வகையில் கோயில் வடக்கு கோபுர வாயில் பக்கம் உள்ள விருதாம்பிகை அம்மன் சன்னதியின் கோபுரக் கலசத்தில், பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசிய 3 கலசங்கள் மாயமாகியிருப்பது நேற்று காலை தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 14 லட்சம் ஆகும். குடமுழுக்கு நடைபெற்று ஒரு மாதம் கூட பூர்த்தியாகாத நிலையில் தங்க மூலாம் பூசப்பட்ட கோபுர கலசம் திருடப்பட்டிருக்கும் சம்பவம் விருத்தாசலம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோயில் செயல் அலுவலர் மாலா அளித்தப் புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இக்கோயில் கலசத்தைத் திருடிய நபர்கள், கோபுரத்தின் மீது எவ்வித சேதாரமும் ஏற்படுத்தாமல் அப்படியே கழற்றிச் சென்றிருப்பதால், இதை பொருத்தும் முறையை நன்கு அறிந்தவர்களே இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
இந்த குழுவினர் கோவில் வளாகத்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விருத்தாச்சலம் நகரப் பகுதியிகளில் உள்ள தெருக்களில் இருந்த சிசிடிவிக்களை கொண்டு தீவிரமாக தேடி வந்தது. மேலும், அண்மையில் கோவிலுக்கு அடிக்கடி வந்த பக்தர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் விருத்தாம்பிகை சன்னதியில் இருந்து திருடப்பட்ட மூன்று கலசங்களை பறிமுதல் செய்த போலீசார், விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகர், அமுதம் தெருவில் பரமசிவம்,49 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கலசம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் இருந்து கலசங்கள் திருடுபோனதால் பக்தர்கள் கவலையடைந்த நிலையில், தற்போது கலசங்கள் மீட்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர். மீட்கப்பட்ட கலசங்களை கோபுரத்தில் பொருத்தி மீண்டும் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் கடந்த 2002ஆம் ஆண்டு குடமுழுக்கு முடிந்த சில மாதங்களில் அர்த்தநாரீஸ்வரர் சிலை மாயமானது. பின்னர் அச்சிலை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2014ஆம் ஆண்டு அச்சிலை மீட்கப்பட்டு, மீண்டும் தமிழகம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications