சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகரவிளக்கு பூஜை..பக்தர்களுக்கு தேவஸ்தானம் குட்நியூஸ்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல,மகர விளக்கு பூஜை காலத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஐயப்பனை தரிசனம் செய்ய வரலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளும் முற்றிலும் விலக்கிக்கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் இருமுடி சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மரக விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ஆம்தேதி மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது வழக்கம்.

சபரிமலை மண்டல பூஜை
சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 17ம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்தில் தான் தொடர்ந்து 41 நாட்கள் நடை திறந்திருக்கும்.

மகர விளக்கு பூஜை
மகர விளக்கு காலத்தில் தொடர்ந்து 20 நாட்கள் நடை திறந்திருக்கும். பிரசித்தி பெற்ற இந்த 2 பூஜை காலங்களில் தான் சபரிமலையில் பக்தர்கள் குவிவது வழக்கம். அப்போது சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.

ஆன்லைன் முன்பதிவு
கடந்த பல வருடங்களுக்கு முன்பு சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் தான் மிக அதிகமாகும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கொரோனாவால் குறைந்த வருமானம்
தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி, முக கவசம் உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் கடந்த 2 வருடங்களாக மண்டல, மகரவிளக்கு சீசன் சமயங்களிலும், மாத பூஜைகளின் போதும் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்தது. இதனால் கோயில் வருமானமும் குறைந்தது.

நவம்பர் 17 நடை திறப்பு
இந்த நிலையில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 17ம் தேதி திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

பக்தர்களுக்கு குட் நியூஸ்
கூட்டத்தில், கடந்த 2 வருடங்களாக சபரிமலையில் அமல்படுத்தப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகளை இந்த வருடம் நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தரிசனத்திற்கு தினசரி எண்ணிக்கை கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது.
எத்தனை பேர் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக நிலக்கல் உட்பட 12 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications