ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 2021 - மோகினியாக அருள்பாலித்த நம்பெருமாள் - நாளை சொர்க்கவாசல் திறப்பு

ஶ்ரீரங்கத்தைச் சார்ந்தவர்கள் வரும் டிசம்பர் 14ஆம் தேதியும் மற்றவர்கள் அவரவர்கள் ஊரில் அருகே இருக்கும் பெருமாள் கோயிலில் கொண்டாடும் தினத்திலும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் இன்று மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். நாளைய தினம் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சாமி திருக்கோவில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலகப் புகழ்பெற்ற விழாவாகும். மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரியது என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட மார்கழியில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாள். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு.

தற்போது வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் ஸ்ரீரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் நாளைய தினம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

நம்பெருமாள் அலங்காரம்

நம்பெருமாள் அலங்காரம்

பகல்பத்து திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் தினசரியும் அலங்காரமாக எழுந்தருளி அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அரையர் சேவையும் நடைபெறுகிறது.
சனிக்கிழமையன்று 8 ஆம் திருநாள் காலை நம்பெருமாள், முத்து கிரீடம், ரத்தின மகர ஹண்டிகை, ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடிக்கொண்டு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

அலங்காரம்

அலங்காரம்

ஒன்பதாம் நாளன்று காலையில் நம்பெருமாள் முத்துக்குறிக்காக, முத்து பாண்டியன் கொண்டை,முத்து அபயஹஸ்தம்
காதுகாப்பு,முத்தங்கி, முத்து ஆபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்
தொடர பிரகாரங்களில் வலம் வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

மோகினி அலங்காரம்

மோகினி அலங்காரம்

பகல்பத்து திருவிழாவின் கடைசி நாளான பத்தாம் திருநாளன்று காலையில் நம்பெருமாள் நாச்சியார்
நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.ரத்தினக்கிளி
தலையில் நாகாபரணம்,பவளமாலை,அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்

நாச்சியார் திருக்கோலத்தின் காரணம்

நாச்சியார் திருக்கோலத்தின் காரணம்


மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நம்பெருமாளின் முன்னழகைக் காட்டிலும், பெருமாளின் பின்னழகைக் காணவே பக்தர்கள் கூடுவர். அந்த அளவிற்கு அலங்காரமாக இருப்பார் நம்பெருமாள். பல்வேறு சிறப்புகளுடைய இத்திருவிழாவில் நாச்சியார் திருக்கோலத்துக்கு ஒரு காரணமும் உண்டு. ரங்கநாதர் தன்னை தரிசிக்க வந்தவர்களை " மம மாயா துரத்யா என்னுடைய மாயையைக் கடக்க சொன்னாராம்.

வைகுண்டத்தை அடையலாம்

வைகுண்டத்தை அடையலாம்

மண்ணாசை பொன்னாசை, பெண்ணாசை. இந்த மூன்று ஆசைகளிலும் பெண்ணாசையை ஒழிப்பது கடினம். ஏனெனில் ஒரு ஜீவன் சரீரமெடுக்க ஆரம்பித்த காலம் முதல் பெண்ணாசை இருந்து வருகிறது. நான் பூண்டிருக்கும் மோகினி வேஷத்தில் மயங்கியதால் அசுரர்கள் அமிர்தத்தையடைவதை இழந்தார்கள். எனவே நீங்களும் பெண்ணாசையில் மயங்காமல் " பரம்த் ருஷ்ட்வா நிவர்த்தந்தே " என்றும் , " மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள்கைவிட்டு " என்றும் சொல்லுகிறபடி நாளைய தினம் ஏகாதசியன்று தான் காட்டிக் கொடுக்கும் மார்க்கத்தைக் கண்டுரைத்து அனுஷ்டித்தால் எல்லாவி தமான மாயையில் இருந்தும் விடுபட்டு, எனது வைகுந்த நாட்டை அடைவீர்களென்று உபதேசிப்பதாகும்.

சொர்க்கவாசல் வழியே நம்பெருமாள்

சொர்க்கவாசல் வழியே நம்பெருமாள்

ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நாளைய தினம் நடைபெறுகிறது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி

திருமலையில் வைகுண்ட ஏகாதசி

தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களிலும் திருமலை, திருப்பதியிலும் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி 2022ல்தான் வைகுண்ட ஏகாதசி என்று பஞ்சாங்கத்திலும் காலண்டரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை ஆச்சாரியார்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படும். இதைப் பெரிய ஏகாதசி என்றும் கூறுவார்கள். மேலும் அனைத்து ஆலயங்களிலும் ஒரே நாளில் ஏகாதசி கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இதேபோன்று ஶ்ரீரங்கத்துக்கும் பிற கோயில்களுக்கும் வேறுபாடு வருவது உண்டு. அந்த ஆண்டில் ஶ்ரீரங்கத்தில் மட்டும் கைசிக ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசியும் மாறிவரும் என்று கூறுகின்றனர்.

அருள் நிச்சயம் கிடைக்கும்

அருள் நிச்சயம் கிடைக்கும்

எனவே பக்தர்கள் இதை மனதில் கொண்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீரங்கத்தைச் சார்ந்தவர்கள் வரும் டிசம்பர் 14ஆம் தேதியும் மற்றவர்கள் அவரவர்கள் ஊரில் அருகே இருக்கும் பெருமாள் கோயிலில் கொண்டாடும் தினத்திலும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். பக்தர்கள் இரண்டு நாள்களிலும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் பகவான் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

பக்தர்கள் எப்போது தரிசனம்

பக்தர்கள் எப்போது தரிசனம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விடுத்துள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கத்தில் 14ஆம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அன்று அதிகாலை 4:45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள், மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருச்சியில் உள்ளூர் விடுமுறை

திருச்சியில் உள்ளூர் விடுமுறை

சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும் நாளைய தினம் 14ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதே சமயம், பள்ளி, கல்லுாரி தேர்வுகள் நடைபெறுவதில், இந்த விடுமுறை பொருந்தாது. இதற்கு மாற்றாக, டிசம்பர் 18ஆம் தேதி, வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+