For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதியில் பிரம்மோற்சவம்..தமிழக பக்தர்களே ஸ்பெஷல் பஸ் ரெடி.. எங்கிருந்து புறப்படும்? முழு விபரம்

Google Oneindia Tamil News

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 150 சிறப்பு பேருந்துகளை திருப்பதி இயக்க உள்ளது.

இந்தியாவின் பணக்கார கடவுளை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

வழக்கமாக புரட்டாசி, மார்கழி மாதங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் திருப்பதிக்கு வருகை தருவார்கள். செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. எனவே பெருமாளை தரிசனம் செய்யப்போகும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பின்னடைவா? அன்னைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்ததை மறந்துட்டீங்களா? கடைசில நாங்கதான் - ஓபிஎஸ் டீம் பரபர! பின்னடைவா? அன்னைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்ததை மறந்துட்டீங்களா? கடைசில நாங்கதான் - ஓபிஎஸ் டீம் பரபர!

பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம் தொடங்கப்படும் நாளான செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி மாலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையாகும். அன்றைய தினம் தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும்.

சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள்

மேலும், அக்டோபர் 2ஆம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி வர உள்ளார். அக்டோபர் 3ஆம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை திருமலை பேருந்து

சென்னை திருமலை பேருந்து

சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருமலைக்கு 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காளஹஸ்தி வழியாக 55 பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பேருந்துகள்; வேலூர் சித்தூர் வழியாக திருப்பதிக்கு 65 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

எங்கிருந்து எத்தனை பேருந்துகள்

எங்கிருந்து எத்தனை பேருந்துகள்

கன்னியாகு குமரி - திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பேருந்துகளை திருப்பதிக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, குப்பம் வழியாக 15 பேருந்துகள் கள்ளக்குறிச்சியில் இருந்து 8 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையன்று ஏழுமலையானை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Tamil Nadu Government Transport Corporation is going to run 150 special buses to Tirupati for the convenience of the devotees in connection with the Brahmotsavam to be held at the Tirupati Elumalaiyan Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X