தன்வந்திரி பகவானுக்கு சர்வ நோய்களுடன் சரும நோய் தீர்க்கும் தைலாபிஷேகம்
தன்வந்திரி பீடத்தில் சர்வ நோய்களுடன் சர்ம நோய் தீர்க்கும் தைலாபிஷேகம் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க உள்ளது.
ராணிப்பேட்டை: காக்கும் கடவுளும் ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையும். மருத்துவ கடவுளும் நோய் தீர்க்கும் பெருமாளுமான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு வருகிற 28.11.2021 ஞாயிற்று கிழமை முதல் 13.12.2021 வரை 18 ஆம் ஆண்டு தைலபிஷேகத் திருவிழா வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
தன்வந்திரி பகவானை நோயுள்ளவர்கள் மனதார வழிபட்டால், தீராத நோயும் தீரும். தன்வந்திரி பகவானுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் திரயோதசி திதியும் மிகச் சிறந்த நாட்கள். சனிக்கிழமையில் தன்வந்திரி பகவானை வணங்குவோம். தேய்பிறை திரயோதசி என்பது இன்னும் மகத்துவமானது. தவிர, எந்த நாளிலும் தன்வந்திரியை வணங்கலாம். பூஜிக்கலாம். விரதம் மேற்கொள்ளலாம்.

ஓம் நமோபகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய ஸ்ரீமஹா விஷ்ணவே நம: என்பது ஸ்ரீதன்வந்திரி பகவான் மந்திரம். இந்த மந்திரத்தை, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக தினமும் 21 முறை சொல்லுங்கள். நீங்கள் யாருக்காக பிரார்த்தனை செய்தீர்களோ, அவர்களின் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். ஆரோக்கியமாக வாழ்வார்கள்.பாரபட்சமில்லாமல், எல்லோருக்கும் வரம் தந்தருளுகிற வாசுதேவராக இருப்பவரே. அமிர்த கலசத்தை திருக்கரத்தில் ஏந்திக்கொண்டிருப்பவரே. மூவுலகத்தையும் பார்த்தபடி, சகல நோய்களையெல்லாம் தீர்த்து அருளுபவரே. மகாவிஷ்ணுவாக, திருமாலாக அவதரித்திருப்பவரே. தன்வந்திரி பகவானே... உமை வணங்குகிறேன். நோய்களையெல்லாம் தீர்த்தருள்வாயாக! என்று அர்த்தம்.
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் தன்வந்திரி பகவானுக்கு தன்வந்திரி பீடத்தில் தைலாபிஷேகம் நடைபெறுகிறது. வைணவ ஆலயங்களில் பெருமாளுக்கு தைலக்காப்பு நடைபெறுவது வழக்கம். அதே போல தன்வந்திரி பகவானுக்கு 28ஆம் தேதி முதல் தைலாபிஷேகம் நடைபெற உள்ளது.
தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.
மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீ ரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான், அவரே ஸ்ரீமன் நாராயணன்.
வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
உடல்பிணி மற்றும் உள்ளத்துப்பிணி தீர தன்வந்திரி ஹோமத்துடன் தைலாபிஷேக விழா ஞாயிறன்று தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி வரைக்கும் தைலாபிஷேக விழா நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபம் மற்றும் ஹோமத்துடன், நல்லெண்ணெயை கொண்டு உலக மக்களின் ஆரோக்ய கருதியும், ருண ரோக நிவர்த்திக்காகவும், நவகிரக தோஷ நிவர்த்திக்காகவும், உடல் ரீதியாகவும், சர்ம ரீதியாகவும் ஏற்படும் தோஷங்கள் குறைவதற்காகவும் தைலகாப்பு எனும் தைலத் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
ஆயுள் தோஷம் நீங்கவும், மனத்தடைகள் விலகவும், மன நோய்கள் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறைவும், ஏழரைசனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், சர்க்கரை நோய், புற்று நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், ஆரோக்ய சம்மந்தமான நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் நீங்கவும் தைலாபிஷேகத்தில் பங்கேற்கலாம். தொடர்புக்கு 94433 30203.












Click it and Unblock the Notifications