தன்வந்திரி பகவான் ஆலயத்தில் திருவோணம் முதல் திருவாதிரை வரை நோய்கள் தீர்க்கும் தொடர் யாகம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருவோணம் முதல் திருவாதிரை வரை தொடர் யாகம்நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 8.12.2021 திருவோணம் முதல் 20.12.2021 திருவாதிரை வரை தொடர் யாகம் நடைபெற உள்ளது.

உலகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருகின்றன. நோய் பரவல் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம். அவை மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி என தசாவதாரங்களாகும். தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார்.

Thiruvonam to Thiruvathirai series of yajnas at the Dhanvantari Bhagavan Temple

நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். அல்லவா? இப்பவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.

தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம்.

மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீதன்வந்திரி பகவான், அவரே ஸ்ரீமன் நாராயணன். அப்படிப்பட்ட தன்வந்திரி பகவானுக்கு வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைந்துள்ளது. இப்பீடத்தில் இங்கு சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் என 6 மதங்களுக்குறிய தெய்வங்களை கொண்டு 87 பரிவார சந்நதிகளை அமைத்து அவற்றுடன் 468 சித்தர்கள் சிவலிங்கம் ரூபமாக அமைந்துள்ளது மிகசிறப்பாகும் மேலும் யாகமே யோகம் - ஹோமமே ஷேமம் என்ற வார்த்தைக்கிணங்க தினசரி பல்வேறு வகையான ஹோமங்கள் நடைபெறும் யக்ஞம் பூமியாக திகழ்ந்து வருகிறது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

இங்கு வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தருகின்றார். இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் எனும் பெயரில் வாலாஜாபேட்டை, இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இப்பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகின்ற 8.12.2021 புதன்கிழமை பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம் முதல் 20.12.2021 ஈஸ்வரனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம் வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை உலக மக்கள் ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இதர பரிவார மூர்த்திகளை வேண்டி கொரோனா என்ற கொடிய நோயின் அச்சம் மற்றும் தாக்கம் குறையவும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும் 100க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், கடுக்காய், ஜாதிக்காய், ஏலக்காய் போன்ற பொருட்களுடன் பட்டு வஸ்திரங்கள், நெய், தேன் பட்சணங்கள் கொண்டு மேற்கண்ட நாட்களில் சிறப்பு தொடர் யாகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் தொடர் ஹோமத்திலும் ஆராதனைகளிலும் பங்கேற்பதன் மூலம் உடலின் எதிர்ப்புத் திறன் உயர்ந்து ஆயுள் ஆரோக்கியம் மேம்படும், தீராத நோய்களை தீரும், கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் மற்றும் பல நன்மைகளை பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தொலைபேசி : 04172 294022, செல் 94433 30203

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+