For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்தனுக்கு உதவிய திருப்பதி ஏழுமலையான் - மண்வெட்டியால் அடித்த பக்தன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக 83 நாட்களுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு போவது என்றாலே பக்தர்களுக்கு விருப்பம் அதிகம்தான். 4 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆன்லைனில் புக் செய்து தரிசனத்திற்காக காத்திருப்பார்கள். பாத யாத்திரையாகவும் சென்று பெருமாளை தரிசனம் செய்வார்கள். ஸ்ரீனிவாச பெருமாளை அலங்கார ரூபத்தில் காண்பது விஷேசம். பெருமாளுக்கு போட்டிருக்கும் நாமம் சிறப்பு அவரது தாடையில் பச்சைக்கற்பூரம் பூசியிருப்பார். உதட்டிற்கு கீழே ஏன் வெள்ளை நிறத்தில் பச்சை கற்பூரம் வைத்திருக்கிறார்கள் என்று நிறைய பேர் யோசிக்கலாம். அது ஒரு சுவாரஸ்யமான புராண கதை.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினசரியும் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம் செய்த ஏழுமலையானை இப்போது நாள் ஒன்றுக்கு 6 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் புக் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர் பக்தர்கள்.

ஏழுமலையானை பார்க்கப் போகும் முன்பாக திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாளையும், அலமேலு மங்காபுரத்தில் பத்மாவதி தாயாரையும் தரிசனம் செய்து விட்டு மலைமீது வராகமூர்த்தியை தரிசனம் செய்த பின்னர்தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் மரபு.

தேய்பிறை பஞ்சமி: நோய்கள் நீங்க எதிரிகள் ஒழிய வாராஹி தேவியை வழிபடுங்கதேய்பிறை பஞ்சமி: நோய்கள் நீங்க எதிரிகள் ஒழிய வாராஹி தேவியை வழிபடுங்க

பெருமாளுக்கு பச்சைக்கற்பூரம்

பெருமாளுக்கு பச்சைக்கற்பூரம்

ஏழுமலையானை அலங்கரிக்கும் போது தினசரியும் பச்சைக்கற்பூரம் சாத்துகின்றனர். பச்சைக்கற்பூரம் ஒரு ரசாயனம். சிலையின் மீது பூசினால் அரிப்பு ஏற்பட்டு கருங்கல் வெடித்து விடும். ஆனால் 365 நாளும் பச்சைக்கற்பூரம் பூசும் பெருமாளுக்கு எந்த வித வெடிப்பும் ஏற்படுவதில்லை. அந்த பச்சைக்கற்பூரம் பூசுவது பற்றி சுவாரஸ்யமான புராண கதை உள்ளது.

பக்தர்களுக்கு தரிசனம்

பக்தர்களுக்கு தரிசனம்

இறைவன் பக்தர்களை காப்பாற்ற சோதனைகளையும் திருவிளையாடல்களையும் நடத்துவார். பக்தனுக்கான நேரில் வந்து காட்சி தருவார் பெருமாள். ஏழுமலையானுக்கு தினசரியும் பல கைங்கரியங்களை செய்பவர்கள் திருமலை நம்பியும் அனந்தாழ்வான் என்பவரும்தான்.
கோவிலில் குளம் வெட்டி பெருமாளுக்கு நந்தவனம் அமைத்து நீர் பாய்ச்சலாம் என்று நினைத்தார் அனந்தாழ்வான். தானாகவே தனது மனைவி துணையோடு குளத்தை வெட்டினார்.

பெருமாளின் சோதனை

பெருமாளின் சோதனை

கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும் கணவருடன் சேர்ந்து குளம் வெட்டும் பணியில் உதவி செய்தார். அப்போது கூலியாள் வேடத்தில் வந்த இறைவன் நானும் உதவி செய்கிறேன் என்று கேட்டார். அதற்கு அனந்தாழ்வான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் விடாமல் அனந்தாழ்வான் மனைவியிடம் சென்று உதவி செய்வதாக கூறி மண் சுமந்தார். இதைப்பார்த்த அனந்தாழ்வான் கோபப்பட்டார்.

பெருமாளுக்கு காயம்

பெருமாளுக்கு காயம்

தனது கையில் வைத்திருந்த மண் வெட்டியைக் கொண்டு வீசி எறிந்தார். அது அந்த கூலியாளின் தாடையை தாக்கி ரத்தம் கொட்டியது. அந்த கூலியாளும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். மறுநாள் ஏழுமலையான் கர்ப்பகிரகத்திற்கு சென்ற அனந்தாழ்வார் அதிர்ச்சியடைந்தார். அங்கே பெருமாளின் தாடையில் இருந்து ரத்தம் சொட்டியது.

தாடையில் பச்சைக்கற்பூரம்

தாடையில் பச்சைக்கற்பூரம்

அடடா நமக்கு உதவி செய்ய வந்தது பெருமாள்தான் என்பதை உணர்ந்த அனந்தாழ்வார், பச்சைக்கற்பூரத்தை எடுத்து பெருமாளின் தாடையில் பூசினார். அந்த ரத்தம் நின்றது. காயமும் ஆறியது. இதன்காரணமாகவே இன்றைக்கும் பெருமாளின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை பூசுகின்றனர்.

English summary
When raw camphor or green camphor a derivative of Cinnamomum camphora tree, is applied on any stone, it leads to cracks and fissures on the object.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X