For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குன்றத்திலே குமரனுக்கு திருக்கல்யாணம் கோலாகலம் - அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகனுக்கு இன்று தெய்வானையுடன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு முருகன் தெய்வானையை தரிசனம் செய்தனர்.

Google Oneindia Tamil News

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் தெய்வானை உடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்தான். திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வானை கல்யாணக் காட்சியைக் கண்டு மகிழலாம். இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார்.

Tiruparankundram Murugan Deivanai Tirukalyanam thousands of Devotees witness

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 18ஆம் தேதிகொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்கார லீலைநேற்று இரவு நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.

திருவிழாவின் 11வது நாளான நேற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

முருகப் பெருமானுக்கு கிரீடம் சூட்டி, சேவல் கொடி சாற்றப்பட்டு நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்க பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கிரீடம் சூடி பட்டாபிஷேக கோலத்தில் முருகனைக் கண்ட பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்

இன்று பகல் 11.50 மணிக்கு கோவிலுக்குள் முருக பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. மதுரையில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் காண வந்திருந்தனர். திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர நிகழ்வின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளைய தினம் காலை நடைபெற உள்ளது. கிரிவல வீதியில் நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

English summary
The main event of the Panguni Uttara festival at the Thiruparankundram Murugan Temple, the marriage of Lord Murugan was held today. The festival was attended by a large number of devotees who chanted Arogara and performed darshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X