திருப்பதி ஏழுமலையான் தொடங்கி... அத்திவரதர் வரை ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் தரிசனம்
வானகரத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள் எழுந்தருள செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வருகிற 10ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னை: மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோயம்பேட்டை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25,000 சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு உள்ளன.
திவ்ய தேசங்கள் என்பது பெருமாளுக்குரிய 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். இந்த ஆலயங்களில் பன்னிரு ஆழ்வார்கள் பாடி நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும். ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மஞ்களாசாசனம் என்று அழைக்கப்படுகிறது.
அப்படி ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற 108 திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்றழைக்கப்படுகிறது. இதில் 105 திருத்தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் இருக்கிறது. மற்ற இரண்டு வானுலகில் இருபதாக வைணவ சமய வழிபாட்டாலர்கள் கூறுகின்றனர்.

108 திவ்ய தேசங்கள்
சென்னை, கோயம்பேட்டை அடுத்து உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பக்தா்கள் பார்வையிடுவதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. ஏ.ஜி.சி.மீடியா நிர்வாக இயக்குனர் ஜி.மோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலாளர் சி.ரமேஷ் மற்றும் வெங்கட்ரமணன், ராஜ் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-
ஒரே இடத்தில் 108 பெருமாள்கள்
பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள செய்யப்பட்டு உள்ளனர்.தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு பெருமாளுக்கும் தினசரி அந்தந்த கோவில்களில் எவ்வாறு பூஜைகள் நடைபெறுமோ? அதுபோன்று பூஜைகள் செய்யப்படுகிறது. பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்பட்ட பின்னர் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

திருப்பதி பெருமாள் கோவில்
இங்கு அமைக்கப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு அர்ச்சனை செய்த பிரசாதத்தை வீடுகளுக்கு எடுத்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு தயிர்சாதம், புளியோதரை, பொங்கல் போன்ற பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர பக்தர்களின் வசதிக்காக உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. 300 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான இடவசதி மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பெருமாளை தரிசிக்க நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமும், சிறப்பு கட்டணமாக ரூ.300ஆம் வசூலிக்கப்படுகிறது.

ஏப்ரல் 10 வரை தரிசனம்
பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களைத் தரிசித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொதுமக்கள் பெருமாள்களை நேரில் தரிசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications