For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் - மார்கழி மாதத்தில் என்னென்ன விஷேசம்

மார்கழி மாதம் தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். தனுசு ராசி கால புருஷ தத்துவப்படி பாக்ய ஸ்தானம். இது குருவின் வீடு. குரு வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது சிறப்பு. மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் என்னென்ன விஷேசம் இருக்க

Google Oneindia Tamil News

சென்னை: மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வார். தனுசு ராசி கால புருஷ தத்துவப்படி பாக்ய ஸ்தானம். இது குருவின் வீடு. குரு வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது சிறப்பு. மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவும், சிவன் ஆலயங்களில் திருவாதிரை திருவிழா எனப்படும் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட மகிமை வாய்ந்த மார்கழி மாதத்தில் என்னென்ன திருவிழாக்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

Vaikunta Ekadasi and Aruthra Dharisanam Margazhi matha important festival

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். இதன் அர்த்தம் நான் ஒருவனே சரணடையத்தக்கவன் என்பதாகும் . இதைத்தான் திருப்பாவையை அருளிய ஆண்டாளும் கூட, 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்' என்று பாடி, மார்கழி மாதத்தில் நோன்பிருந்து பகவான் கிருஷ்ணரை சரணடைந்தால், அவன் ஓடோடி வந்து நமக்கு மோட்சம் அளிப்பான் என்று கூறியுள்ளார்.

மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் நாளை புதன்கிழமை பிறக்கிறது. எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேசம் வருகிறது என்று பார்க்கலாம்.

மார்கழி 1ஆம் தேதி தனுர்மாத பூஜை ஆரம்பம். சந்திர தரிசனம், திந்திரினி கௌரி விரதம்

மார்கழி 4 நாக பூஜா பஞ்சமி

மார்கழி 5 சஷ்டி விரதம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு. சுப்ரமணிய சிவலிங்க சஷ்டி. நகரத்தார் பிள்ளையார் நோன்பு.

மார்கழி 6 பாலசப்தமி, மார்கழி 7ஆம் தேதி துர்காஷ்டமி தனுர் மகாவியதீபாதம் ஸ்நானம்.

மார்கழி 9 ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மோகினி அலங்காரம்.

மார்கழி 10 வெள்ளிக்கிழமை சர்வ முக்கோட்டி வைகுண்ட மோட்ச ஏகாதசி வைதரணி விரதம்

மார்கழி 11 சனிக்கிழமை உல்கா துவாதசி, மத்ஸ்ய துவாதசி, கார்த்திகை விரதம்

மார்கழி 12 ஞாயிறு கிழமை மிருத்யுஞ்ச பிரதோஷம். சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு செய்யலாம்.

மார்கழி 14 செவ்வாய்கிழமை சிவ ஆலயங்களில் ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும்.

மார்கழி 15 புதன்கிழமை சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்

மார்கழி 16 வியாழக்கிழமை பரசுராமர் ஜெயந்தி

மார்கழி 17 வெள்ளிக்கிழமை திருமங்கை மன்னன் வேடுபறி

மார்கழி 18 சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு

மார்கழி 22 புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி புதாஷ்டமி

மார்கழி 25 சனிக்கிழமை உற்பத்தி ஏகாதசி

மார்கழி 27 திங்கட்கிழமை கூடாரவல்லி ஆண்டாள் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம். பெருமாளுக்கு அக்கார அடிசல் படைத்து வழிபாடு.

மார்கழி 28 அனுமன் ஜெயந்தி. சர்வ அமாவாசை . அனுமன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

மார்கழி 29 போகிப்பண்டிகை தினம்

English summary
Vaikunta Ekadasi and Aruthra Dharisanam, Anuman Jayanthi viratham days for important viratham days Margazhi 2020. The month of Margazhi is the auspicious month for worship. The sun will travel in Sagittarius this month. Sagittarius is the position of fate according to the male philosophy of the period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X