Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஷாட நவராத்திரி - தடைகள் நீங்கி காரிய வெற்றி கிடைக்க வளர்பிறை பஞ்சமியில் வாராஹியை வழிபடலாம்

நாளைய தினம் வளர்பிறை பஞ்சமி. ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும் இந்த நாளில் வாராஹி தேவியின் சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிலருக்கு எதிரிகள் தொல்லை அதிகம் இருக்கும் பலருக்கு கடன் பிரச்சினை கழுத்தை நெரிக்கும். சிலருக்கு நோய்கள் வாட்டி வதைக்கும். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானம் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மூன்று பிரச்சினைகளும் விடாது விரட்டும். வளர்பிறை பஞ்சமி நாளில் வாராஹி தேவியை தவறாமல் வழிபட்டால் எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். தடைகள் விலகி காரிய வெற்றி கிடைக்கும்.

மகாசக்தி அன்னை வாராஹி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பஞ்சமுக வாராஹியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றாள். அன்னையை வழிபட அனைத்து வளங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வராஹி நவராத்திரியை முன்னிட்டு 1200 தாமரை மலர்கள் அஷ்ட வாராஹி ஹோமம்,
1008 நெய் தீபம்,18 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் 108 மூலிகை ஹோமம்,
மரவள்ளி கிழங்கு, கருணை கிழங்கு, சேனை கிழங்கு, உருளை கிழங்கு, போன்ற கிழங்கு வகைகள், வெண்கடுகு,பற்படாகம், எட்டு வகையான புஷ்பங்கள் கொண்டு சஹஸ்ரநாமம் அர்ச்சனை, அரிசி, தேங்காய் நெய் கொண்டு தீபம் ஏற்றி வைத்து பூண்டு வெங்காயம் கலந்த உணவு மற்றும் ஐந்து வகையான நிவேதனம் செய்து சிறப்பு வழிபாடு தன்வந்த்ரி பீடத்தில் உள்ள பஞ்சமுக வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி வைபவம் நடைபெற உள்ளது. நேரில் வர இயலாதவர்கள் ஆலயத்தை தொடர்பு கொண்டு மனதார வேண்டிக்கொள்ளலாம். வீட்டிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.

Valarpirai Panchami: Worship Varahi to remove obstacles and achieve success

வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹியை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், சகல தடைகளையும் நீக்கி அருளுவாள் தேவி. வழக்குகளிலிருந்து விடுபட வாராஹியின் அருள் கட்டாயம் தேவை. வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் கட்டாயம் தேவை.

தேவதைகள் எல்லோருமே சக்தி வாய்ந்தவர்கள்தான். தேவதா சக்தி என்று மிகப்பெரிய விளக்கமே கொடுத்திருக்கிறது புராணம். இவர்களில் சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி.
மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள். அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்று விவரிக்கிறது புராணம்.

இந்த சக்திகளில் ஏழு சக்திகளுக்கு தனியிடம் கொடுத்து கெளரவப்படுத்தினாள் பராசக்தி. இந்த ஏழுபேரும் கொண்டவர்களை, சப்த மாதர்கள் எனப் போற்றுகிறோம், போற்றி வணங்குகிறோம் என்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்பவர்கள்.

சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி. சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டன. யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. போருக்குச் செல்வதற்கு முன்னரும் போருக்குச் சென்று விட்டு வந்த பிறகும் சப்தமாதர்களை வழிபட்டார்கள்.

Valarpirai Panchami: Worship Varahi to remove obstacles and achieve success

சப்தமாதர்களில், கெளமாரி, மகேஸ்வரி என தெய்வங்களுக்கு தனித்தனியே ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னாளில், அடுத்தடுத்த கட்டங்களில், வாராஹிக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு, பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில், தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹியை தரிசிக்கலாம். ஆனால் ராஜராஜ சோழன் வாராஹி தேவிக்கு, பெரியகோயிலில் சந்நிதி எழுப்பவில்லை. பின்னாளில்தான், அதுவும் சமீபத்தில்தான் வாராஹியின் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. வராஹியை வணங்கி வருகிறார்கள் பக்தர்கள்.

பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். இந்தநாளில், மனதார வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எல்லா நல்லதுகளும் நடத்தித் தருவாள் வாராஹி. வளர்பிறை பஞ்சமிதான் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்றாலும் தேய்பிறை பஞ்சமியிலும் வராஹியைத் தரிசிக்கலாம். விளக்கேற்றி வழிபடலாம்.

அருளும் பொருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி. நாளைய தினம் புதன் கிழமை ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளை
யெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்!

தஞ்சை பெரியகோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9ஆம் தேதி தொடங்கியது.

பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சனிக்கிழமையன்று வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3வது நாளான நேற்று வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று சந்தன அலங்காரமும், 13ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 15ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 16ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 18ஆம் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது. ஆஷாட நவராத்திரி விழா வருகிற 19ஆம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+