For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவை வீழ்த்தும் வேப்பம்பூ - தமிழ் புத்தாண்டு நாளில் வேப்பம்பூ ரசம் சாப்பிடுங்க

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது. இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும் என்பதை உணர்த்தும் விதமான வேப்பம்பூ ரசம் மாங்காய் பச்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இன்றைய நேரத்தில் வேப்பம்பூ ரசமும் மாங்காய் பச்சடியும் தமிழர்களின் வாழ்வில் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறியலாம். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் நிறைந்துள்ள இந்த கால கட்டத்தில் மருத்துவ குணம் நிறைந்த வேப்பம்பூ பற்றி அறிந்து கொள்வோம்.

ஒரு வேப்பமரம் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் எந்த நோயும் தாக்காது. வேப்ப மரக் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டது.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

வேப்பம்பூக்கள்

வேப்பம்பூக்கள்

சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து வசந்த காலத்தை உலகிற்கு அறிவிக்கும். வேப்பம்பூக்கள் காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

வேப்பம்பூக்கள் மருத்துவம்

வேப்பம்பூக்கள் மருத்துவம்

வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

அரோமா தெரபி

அரோமா தெரபி

குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். அரோமா தெரபி எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.

வயிறு பிரச்சினை நீங்கும்

வயிறு பிரச்சினை நீங்கும்

வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும். வேப்பம் பூவை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து பருப்புப் பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும்.
வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள், மண், சாக்பீஸ், விபூதி சாப்பிடும் வழக்கமுள்ள குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.

வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம்

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது. இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும் என்பதை உணர்த்தும் விதமான வேப்பம்பூ பச்சடி, வேப்பம்பூ ரசம் வைக்கப்படுகிறது.

English summary
Veppam poo rasam recipe Neem flower benefits for Tamil Puthandu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X