For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விக்னங்களைப் போக்கும் விநாயகரின் அவதாரங்களும் அவதாரத்தின் நோக்கமும்

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது. இந்தவகையில் விநாயரை வணங்கும்போது இவரின் 12 பெயர்களை கூறி வழிபட்டால் 12 அவதாரங்களின் பலன் கிடைக்கும். விநாயகரின் 12 அவதாரங்களைப்பற்றி பார்ப்போம்.

Google Oneindia Tamil News

சென்னை: கஜமுகாசுரனை வெல்வதற்காக அவதரித்தவர் கணபதி. விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது. இந்தவகையில் விநாயரை வணங்கும்போது இவரின் 12 பெயர்களை கூறி வழிபட்டால் 12 அவதாரங்களின் பலன் கிடைக்கும். விநாயகரின் 12 அவதாரங்களைப்பற்றி பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆவணி 25ம் தேதி வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நோய் பரவல் உள்ள இந்த கால கட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே நாம் பாதுகாப்பாக கொண்டாடலாம்.

ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து வரவேண்டும். 11 சதுர்த்தி தினங்களில் விரதம் இருந்த பிறகு, அடுத்த ஆவணியில், மீண்டும் விநாயக சதுர்த்தி அன்று விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். தடைபட்ட திருமணம், படிப்பு, வேலை, குழந்தைப் பேறு, வீடு கட்டுதல் என பல்வேறு காரணங்களுக்காக சதுர்த்தி விரதம் இருக்கலாம். வேண்டுதல் நிறைவேறும்.

Vinayagar Chathurthi: Ganesha and the purpose of the incarnation

கஜமுகாசுரனை வெல்வதற்காக அவதரித்தவர் கணபதி. வக்ரதுண்ட விநாயகர் அவதாரம் நிகழ்ந்தது உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் ஆகியோருக்கு அருளுவார் இந்த விநாயகர்.

கஜானனபவிநாயகர் சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர். காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர் விக்கிரனபராஜர்.

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம் : நினைத்த காரியம் நிறைவேற்றும் பிள்ளையார் விரதம் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம் : நினைத்த காரியம் நிறைவேற்றும் பிள்ளையார் விரதம்

மயூரேசர் பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர். சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர் உப மயூரேசர்.

தூமராசன் என்ற அசுரனை கொன்றவர் பாலச்சந்திரர். கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.

பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர் கணேசர். மகோற்கடர் அவதாரம் காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய நிகழ்ந்தது.
துண்டி கணபதி துராசதன் என்ற அசுரனை வென்றவர். வல்லபை விநாயகர் மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.

விநாயகர் சதுர்த்தி: கொரோனா எச்சரிக்கையை மீறி சந்தைகளில் குவிந்த மக்கள் - பூக்கள் விலை அதிகரிப்புவிநாயகர் சதுர்த்தி: கொரோனா எச்சரிக்கையை மீறி சந்தைகளில் குவிந்த மக்கள் - பூக்கள் விலை அதிகரிப்பு

இந்த அவதாரங்களைத் தவிர்த்து விநாயகரை 32 விதமான மூர்த்தங்கள் பெற்று விளங்குகிறார். பால கணபதி, தருண கணபதி,பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவிஜ கணபதி, சித்தி கணபதி,உச்சிட்ட கணபதி, விக்ன கணபதி, க்ஷிப்ர கணபதி, ஏரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மஹா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயாக்ஷர கணபதி, க்ஷிப்ரபிரசாத கணபதி, ஹரித்திரா கணபதி, ஏகதந்த கணபதி, சிருஷ்டி கணபதி, உத்தண்ட கணபதி, ரணமோசன கணபதி, துண்டி கணபதி, துவிமுக கணபதி, மும்முக கணபதி, சிங்க கணபதி, யோக கணபதி,துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி என பலவித கணபதிகளும் மக்களுக்கு வரம் தரும் கணபதிகளாக இருக்கின்றனர்.

முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

பிடித்து வைத்தால் பிள்ளையார், மஞ்சளோ, மாட்டுச்சாணமோ ஒரு இலையில் பிடித்து வைத்தால் அவர் விநாயகராக அருள் தருவார். விநாயகரை வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.

English summary
Ganesha Chaturthi Day is celebrated annually on the Waxing Chaturthi Day in the month of Avani. In that sense this year Avani 25th is celebrated on Friday 10th September. Ganesha Chaturthi can be celebrated safely at home
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X