For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏகாதசியை விட சிறப்பான விஷ்ணுபதி புண்ணியகாலம்.. மாசி முதல்நாளில் மகாவிஷ்ணுவை வணங்குங்கள்

தை மாதம் முடிந்து மாசி மாதம் பிறக்கப்போகிறது. இது விஷ்ணுபதி புண்ணியகாலமாகும். இது ஏகாதசியை விட சிறப்பான நாளாக போற்றப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை:

தை மாதம் முடிந்து மாசி மாதம் பிறக்கப்போகிறது. இது விஷ்ணுபதி புண்ணியகாலமாகும். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.

ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.

மாசி மாத பிறப்பன்று பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மரத்தை வணங்கி 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமரத்தை வணங்க வேண்டும்.

2022ம் ஆண்டின் முதல் ராக்கெட்: காதலர் தினத்தில் விண்ணில் பாயப்போகும் பிஎஸ்எல்வி - சி 52 2022ம் ஆண்டின் முதல் ராக்கெட்: காதலர் தினத்தில் விண்ணில் பாயப்போகும் பிஎஸ்எல்வி - சி 52

புண்ணிய காலங்கள்

புண்ணிய காலங்கள்

தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை.

பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும்.

ஏகாதசியை விட சிறப்பு

ஏகாதசியை விட சிறப்பு

விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம். பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.

விஷ்ணுபதி புண்ணியகால விரதம்

விஷ்ணுபதி புண்ணியகால விரதம்

ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களை தவிர்க்க வேண்டும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் அமையும். மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூடியது இந்த புண்ய காலம்.

துளசி பூஜை செய்யலாம்

துளசி பூஜை செய்யலாம்

இந்த புண்ணிய காலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் மைந்தன் ஸ்ரீமன் நாராயணனின் அருள் நிச்சயம் கிடைக்கும். இந்த புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை செய்யலாம். முறைப்படி பூஜை செய்யத் தெரியாதவர்கள் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். துளசி பூஜை, கோ பூஜை மற்றும் மகாலட்சுமிக்கு மகிழ்ச்சி தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்கு தகுந்தவாறு செய்யலாம்.

English summary
The holy month of Vishnupati will born in the Tamil month of Masi. It is a holy day similar to Ekadasi. On this day, the family problems that cannot be worshiped by thinking of Mahavishnu and his mother will be solved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X