நவம்பர் மாத ராசி பலன் 2021: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதம்
நவம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் நன்மைகள் அதிகம் நிறைந்த மாதமாக உள்ளது.
சென்னை: நவம்பர் மாதத்தில் சூரியன் துலாம், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச்ச பங்க நிலையில் உள்ள சூரியன் மாதத்தின் நடுவில் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். செவ்வாய் வீட்டில் சூரியன் கேது உடன் கால புருஷனுக்கு எட்டாம் வீட்டில் அமர்வது அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும். குரு இந்த மாதம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வையால் மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
நவம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, தனுசு ராசியில் சுக்கிரன், துலாம் ராசியில் மாத முற்பகுதியில் பயணிக்கும் சூரியனுடன் புதன், செவ்வாய் இணைந்து பயணம் செய்கின்றனர்.
மாத பிற்பகுதியில் சூரியன், புதன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி கேது உடன் இணைகிறார். குரு பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த கிரகங்களின் இடமாற்றத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

யோகமான காலம்
ராசிநாதன் செவ்வாய் ஏழாம் வீட்டில் சூரியனுடன் இணைந்துள்ளார். செவ்வாயின் பார்வை உங்கள் ராசி மற்றும் இரண்டாம் வீட்டின் மீது விழுகிறது. சூரியன், புதன் பார்வையும் ராசியின் மீது விழுவதால் ராஜயோகம். ஒன்றாம் அதிபதி 5ஆம் அதிபதி இணைகின்றன. சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் யோகமான காலகட்டமாகும்.

புதிய வேலை
குரு பகவான் இந்த மாதம் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பெயர்ச்சியால் இந்த மாதம் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும், வேலையில் இடமாற்றம் ஏற்படும். சொந்த தொழில் தொடங்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் சாதகமான நேரம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கலாம்.

சுப காரியம் கை கூடும்
குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் களத்திர ஸ்தானத்தில் உள்ள சூரியன், செவ்வாய், புதன் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். குரு பலம் உங்களுக்கு திருமண யோகத்தை தருவார். வரன் பேசி முடிக்க நல்ல நேரம். வீடு, வண்டி வாகனம் வாங்கலாம். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ஆரோக்கியத்தில் கவனம்
கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் பேச்சில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும். மாத பிற்பகுதியில் சூரியன் கேது உடன் இணைந்து பயணம் செய்யும் போது குடும்ப வாழ்க்கையில் சில பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நன்மைகள் நிறைந்த மாதம்
குடும்பத்தலைவிகள், இல்லத்தரசிகளுக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைப்பளு அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதன் சூரியன் இணைந்து கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிசினஸ், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.
மாத பிற்பகுதியில் திடீர் உடல் நலப்பிரச்சினைகள் வந்து நீங்கும். நவம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications