புரட்டாசி மாத சனிக்கிழமை: திருமண தடை நீங்க பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுங்க
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு அரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றினால் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.
சென்னை: புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது. ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு சிறப்பானது போல புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பச்சரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து தீபம் ஏற்றி பெருமாளை வணங்க திருமண தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திரமும் கூடிய சுப நாளில் பிறக்கிறது. மகாவிஷ்ணுவின் அவதாரமாக காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் அவதரித்தது புரட்டாசி மாதத்தில் இவ்வாறு புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுக்கு உகந்த மாதம் ஆனது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். மாவு உருண்டை என்பது ஏழுமலையையும் அதன் மேல் பற்ற வைக்கும் தீபம் வேங்கடவனையும் குறிக்கும். திருமணம் நடைபெறுவதில் பல தடைகள் ஏற்படுகின்றன. மாப்பிள்ளைக்கு பெண் அமைவதும் பெண்ணிற்கு மாப்பிள்ளை அமைவதும் பெரும்பாடாக இருக்கிறது. தோஷங்களும் தடைகளும் நீங்கி திருமணம் நடைபெற புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.

புரட்டாசி மாத சிறப்புகள்
புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.

சனிக்கிழமை விரதம்
புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது. ஜாதகத்தில் புனர்ப்பு தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் தோஷ நிவர்த்தியாகி திருமணம் நடைபெறும்.

பெருமாளுக்கு மாவிளக்கு
திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தவர்களின் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. இடித்தெடுத்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய்,எள் போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் நெய் ஊற்றி திரிப்போட்டு விளக்கேற்றப்படும்.

சனிக்கிழமை தளியல்
புரட்டாசி சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படையல் போட்டு வணங்குவார்கள். வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல்,எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.

கோவிந்தா கோவிந்தா
பெருமாள் படத்தின் முன்பாக குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேத்தியங்களை இலையில் பரிமாற வேண்டும். உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து கோவிந்தா என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது பழக்கம்.

சனி சந்திரன் சேர்க்கை
சனி சந்திரன் சேர்க்கை சனி சந்திரன் கிரக பரிவர்த்தனை. சனி சந்திரன் சப்தாம்ச பார்வை. சனி சந்திரன் சார பரிவர்த்தனை ஆகிய எல்லாமே புணர்ப்பு அமைப்புதான். புணர்ப்பு அமைப்பு இருப்பவர்கள். புணர்ப்பு தோஷம் இருப்பவர்கள் தயக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆணோ பெண்ணோ அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நெருங்க விடமாட்டார்கள். ஜாதகத்தில் 4,10,11 ஆகிய வீடுகளில் சனி சந்திரன் சேர்க்கை ஏற்பட்டால் புணர்ப்பு யோகமாகி ராஜயோகம் ஏற்படும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

புனர்ப்பு தோஷ நிவர்த்தி
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையலிட புணர்ப்பு தோஷத்தினால் ஏற்படும் திருமண தடைகள் நீங்கும். சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபடுகின்றனர் பக்தர்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications