For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி 2022: கேது திசையில் திருமணம் செய்யலாமா? என்ன பாதிப்பு வரும்... பரிகாரம் என்ன ?

கேது திசை காலங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கேது திசையில் திருமணம் செய்தால் இல்வாழ்வில் ஈடுபாடு உண்டாகாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளை கொடுக்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: ஞானகாரகன் கேது. நவகிரகங்களில் கேது பலம்வாய்ந்த கிரகம். கேது ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர். அவரது தசாபுத்தி நடைபெறும் ஏழு ஆண்டுகளில் என்னென்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

கேது பகவான் ஞானகாரகன். கேது ஆன்மீக புத்தியை புகட்டுபவர். கேதுவைப் போல கொடுப்பார் இல்லை என்பார்கள். கேது நிறைய ஞானத்தையும் ஆன்மீக புத்தியையும் புகட்டுபவர். முக்தி வழியை காட்டுபவர். நவகிரகங்களில் கேது கடைசியாக சொல்லப்பட்டாலும். அசுவினி, மகம், மூலம் எனப்படும் முக்கிய நட்சத்திரங்களின் அதிபதியாக திகழ்பவர். இவரது தசாபுத்தி காலம் ஏழு ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளில் என்னென்ன பலன்களை தருவார் படிப்பினைகளை தருவார் என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

அபிலாஷா பராக்! இந்திய ராணுவ முதல் பெண் போர் விமானியாக தேர்வு... சென்னையில் பயிற்சி பெற்று சாதனை அபிலாஷா பராக்! இந்திய ராணுவ முதல் பெண் போர் விமானியாக தேர்வு... சென்னையில் பயிற்சி பெற்று சாதனை

கேது திசை எத்தனை ஆண்டுகள்

கேது திசை எத்தனை ஆண்டுகள்

ஒருவரின் ஜாதகத்தில் கேது பலம் பெற்று குரு, சுக்கிரன், உள்ளிட்ட சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். கேது பலமில்லாத நிலையில் பாதிக்கப்பட்டிருந்தாலோ தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளை ஏற்படுத்துவார். ஒருவரின் ஜாதகத்தில் கேது தசை ஆளுமை செய்வது 7 ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளில் ஞானமார்க்கத்தை காட்டி விட்டு சென்று விடுவார். இன்பங்களை அனுபவிக்கத்தருவபர் ராகு. ஆன்மீக நிலையில் உச்ச நிலையை காட்டி விடுபவர் ராகு.

கேது பகவான் செய்யும் செயல்கள்

கேது பகவான் செய்யும் செயல்கள்

ராகுவைப் போல கேது கெடுதல்களை பெரிதாக செய்ய மாட்டார். கேதுவின் தசை நடந்து கேதுவிற்கு வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்று வலுவாக இருந்தார் கேது நன்மை செய்வார்.சுபத்துவம் பெற்ற சனி, குரு உடன் சேரும் போது ஆன்மீகத்தில் அற்புதத்தை தருவார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் இவர்களெல்லாம் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர். அசுவினி, மகம், மூலம் மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக கேது திசை வரும். கேது செம்பாம்பு என்று சொல்வார்கள்.

அதிர்ஷ்டம் தரும் கேது பகவான்

அதிர்ஷ்டம் தரும் கேது பகவான்

கேது பகவான் பலம் பெற்று குழந்தை பருவத்தில் கேது திசை நடைபெற்றால் விளையாட்டு தனம், பிடிவாத குணம் போன்றவை இருக்கும். வாலிப பருவத்தில் நடைபெற்றால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும், கல்வியில் சுமாரான நிலையிருக்கும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபாடு, போராடி வாழ்வில் வெற்றி பெறக் கூடிய நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் தெய்வீக பணிகளுக்காக செலவு செய்யும் அமைப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை, சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து உயரக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

கேதுவினால் யாருக்கு நன்மை

கேதுவினால் யாருக்கு நன்மை

கேது செவ்வாயை போல செயல்படுவார் என்பதால் மேஷம், விருச்சிகம், கடகம் சிம்மம், தனுசு மீனம் இந்த லக்னகாரர்களுக்கு கேது நன்மை செய்வார். கேது திசை வரும் போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை. சுப வீடுகளில் கேது இருக்கும் போது வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் தானே அவராக மாறி நன்மை செய்வார்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம். இடமாற்றம் கேதுவின் காரகத்துவம். கேது தசை மட்டுமல்ல கேது புத்தி, அந்தாரத்தில் கூட சிறு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார். வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார். மனிதனின் ஒரு நாளில் இறுதி படுக்கை அறை தூக்கம். உறக்கத்தையும், தூங்கும் இடத்தையும் கேது குறிப்பார். மரணம் எவ்வாறு நிகழும். மரணத்திற்கு பின் என்ன என்றும் நிர்ணயிக்கிறார் கேது.

நோய்கள் தரும் கேது பகவான்

நோய்கள் தரும் கேது பகவான்

கேது பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் வயிறு கோளாறு, அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள், பெற்றோருக்கு சோதனையை உண்டாக்கும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை தேவையற்ற பழக்க வழக்கங்கள், காதல் என்ற வலையில் சிக்கி சீரழியும் வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு

மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, ஊர் விட்டு ஊர் சென்று அலைந்து திரியும் சூழ்நிலை, தற்கொலை எண்ணம் போன்றவை உண்டாகும். முதுமை பருவத்தில் திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு நெருங்கியவர்களை இழக்கும் நிலை, உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், சமுதாயத்தில் கௌரவ குறைவுகள் உண்டாகும்.

கேது எங்கு இருந்தால் என்ன பலன்

கேது எங்கு இருந்தால் என்ன பலன்

கேது திசையோ கேது புத்தியோ நிகழும் போது நன்மை நடைபெறும். ஜாதகத்தில் சுப வீடுகளில் அமர்ந்து நன்மை செய்வார். ஞானிகள் தரிசனம் ஆன்மீக பயணங்களை ஏற்படுத்துவார். ஒருவரின் ஜாதகத்தில் 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால் நல்ல பலன்களை தருவார். கன்னி, மிதுனம், ரிஷபம், கும்பம், துலாம் ஆகிய லக்ன காரர்களுக்கு சுமாரான பலன்களையே செய்வார்.

மனக்குழப்பம் நீங்கும்

மனக்குழப்பம் நீங்கும்

ஜாதகத்தில் 1,5,9 ஆகிய இடங்களில் அமர்ந்து குரு பார்வை கிடைத்தால் சமுதாயத்தில் நல்லதொரு கௌரவம், பல பெரிய மனிதர்களின் தொடர்பு, கோயில் கட்டும் பணிகளில் ஈடுபாடு தெய்வ காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு கொடுக்கும். கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெற்றோ, பாவகிரக சேர்க்கைப் பெற்றோ அமைந்து கேதுதிசை நடைபெறும் காலங்களில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனகுழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய நிலை, இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கேது திசையில் இதை செய்யக்கூடாது

கேது திசையில் இதை செய்யக்கூடாது

கேது திசை காலங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கேது திசையில் திருமணம் செய்தால் இல்வாழ்வில் ஈடுபாடு உண்டாகாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளை கொடுக்கும். 8ஆம் வீட்டில் கேது ஒருவருக்கு அமைந்தால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி என்ன வியாதி என்றே கண்டு பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற குழப்பங்களால் தற்கொலை எண்ணத்தை தூண்டும்

இல்லற வாழ்க்கையில் பிரச்சினை

இல்லற வாழ்க்கையில் பிரச்சினை

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர் புகழ், கௌரவம் உயரும் அமைப்பு, ஆலய தரிசனங்கள் ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். அதேபலமில்லாமல் இருந்தால் இல்லற வாழ்க்கையில் பிரச்சினை வரும். கேது திசையில் சுக்கிர புக்தி நடைபெறும் போது, சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கை கூடும் அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம், உத்தியோகத்தில் உயர்வு, செல்வ சேர்க்கை ஏற்படும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் பணவிரயம், விஷத்தால் பயம் மேலிருந்து கீழே விழும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசத்தால் அவமானம் ஏற்படும் நோய்களும் பாதிக்கும். கேது திசையில் ராகுபுக்தி என்பதால் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கேது தோஷம் போக்கும் பரிகாரத்தலங்கள்

கேது தோஷம் போக்கும் பரிகாரத்தலங்கள்

ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும் விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். கேதுவின் அதி தேவர் விநாயகர். விநாயகரை வழிபடுதல், சதூர்த்தி விரதம் இருத்தல் போன்றவை கேதுவால் உண்டாக கூடிய தீய பலன்களை குறைக்க உதவும் தோஷம் விலகும். மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறுதோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம். தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது.

எமகண்டத்தில் அபிஷேகம்

எமகண்டத்தில் அபிஷேகம்

திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் - திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கேது பகவானுக்கு எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

English summary
Ketu mahadasha is an extremely serious dasha which causes due to Positive Effects of ketu Mahadasha.The ketu dasha lasts around 7 year in your horoscope.ketu mahadasha proves dreadful for him/her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X