ரிஷப ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
ரிஷப ராசி அன்பர்களே! அதிரடியான செய்திகள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் இடையூறுகள் விலகும். தொழில்துறைகளில் விறுவிறுப்பு அதிகரிக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். கையில் தாராளமாக பணம் புழங்கும். நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். உங்களின் செல்வாக்கு வேலை இடத்தில் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகத்தை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள்.
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள்.
இன்று உங்கள் பலம்:
தொழிலுக்கு தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும். அரசியல்வாதியின் ஆதரவு ஊக்கம் தரும்.
இன்று உங்கள் பலவீனம்:
உங்கள் எண்ணத்திற்கு உரிய மரியாதை கிடைக்காமல் போகலாம். குழந்தைகளின் போக்கு மன சஞ்சலம் தரும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 ஆடம்பரச் செலவுகளில் மனம் ஆசைப்படக்கூடாது.
2 பண வரவை சேமிப்பாக மாற்ற வேண்டும்.
3 உரிய நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2,9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
| தேதி | 27 - வைகாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | தசமி (up to June 11, 12:58 am) ஏகாதசி (up to June 11, 10:36 pm) |
| நட்சத்திரம் | உத்திரட்டாதி (up to 9:21 am) ரேவதி (up to June 11,8:16 am) |
| யோகம் | மரண யோகம் |
| நல்ல நேரம் | 9:30 - 10:30 am / 1:30 - 2:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திரம் |
| சூரியோதயம் | 5:45 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:30 PM |
| சந்திரோதயம் | Jun 10 1:10 AM |
| சந்திர அஸ்தமனம் | Jun 10 1:45 PM |