Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு புதன் பகவானால் அதிர்ஷ்டம் கன்ஃபார்ம்.. கோபத்தால் வரும் ஆபத்து
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகள் விஷயங்கள், தொழில் சார்ந்த விஷயங்கள், வியாபாரிகள், அக்கம்பக்கத்தினரிடம் சண்டையிடாமல் இருப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் இணக்காமகச் செல்வது நன்மை பயக்கும்.
இரவு நேர பயணம்
பிள்ளைகளின் ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அடிவயிறு தொடர்பான விஷயங்கள், கண், பல் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 7 ஆம் இடத்தில் இருக்கும் புதன் அறிவு, வெற்றி, சமயோஜித புத்தியைக் கொடுப்பார். வேலைக்குப் பிரச்சனை இருக்காது. இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
அனுகூலம்
பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் அற்புதம் ஏற்படும். உங்களுக்காக நிறைய தியாகங்களை அவர்கள் செய்வார்கள்.
கோபம் வேண்டாம்
பெருமாள் கோயில்களுக்கு தரிசனத்திற்குச் செல்வீர்கள். பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் ராசியில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய காலகட்டம். சனியும் அற்புதமாக இருப்பதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் ரோஷப்படுவது, கோபப்படுவது, கத்துவது, நண்பர்களுக்காக குடும்பத்தினரிடம் சண்டை போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
சூரிய வழிபாடு
தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வேலையில் இருப்பவர்கள் இரவு நேர ஷிப்டாக இருந்தால் பரவாயில்லை. தேவையில்லாமல் தூக்கத்தைக் கெடுக்காமல் இருப்பது நல்லது. நரம்பு, கண், தலைவலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. நவக்கிரகத்தில் இருக்கும் சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications