சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி மீன ராசிக்காரர்களுக்கு யோகமா? சோகமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி. மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் மற்றும் ரிஷப ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது, வேலை தொழில் எப்படி இருக்கும், பொருளாதார நிலைமை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார்.

கும்ப ராசியில் இடப்பெயர்ச்சியாகும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். பொதுவாகவே சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த சனி பெயர்ச்சியால், ஏழரை சனி ஆரம்பிக்கப்போகும் மீன ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஏழரை சனி

ஏழரை சனி

மீன ராசிக்காரர்களே..கடந்த இரண்டரை ஆண்டு காலம் லாப சனியாக பயணம் செய்த சனிபகவான் இனி ஏழரை சனியில் விரைய சனியாக பயணம் செய்யப்போகிறார். பிறந்த ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், குடும்பத்தில் சந்தோசம், நிம்மதி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சியால் பலன்

சனி பெயர்ச்சியால் பலன்

மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 12ஆம் வீடான அயன சயன ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. சனி பகவான் 12ஆம் வீட்டில் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை. வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

சனிபகவானால் சந்தோஷம்

சனிபகவானால் சந்தோஷம்

எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். குடும்ப ஸ்தானத்தை சனிபகவான் பார்வையிடுவதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுப்பது நல்லது. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும்.

மருத்துவ செலவுகள் கவனம்

மருத்துவ செலவுகள் கவனம்

பாக்கிய ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். வேலை விசயத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.

மாணவர்கள் கல்வியில் கவனம்

மாணவர்கள் கல்வியில் கவனம்

மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அடிக்கடி மறதி வரலாம் ஞாபகசக்தி குறைவினால் சிக்கல்கள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கவனமும் அக்கறையும் செலுத்துவது நல்லது. கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். சனிபகவான் தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+