மாங்கல்ய வரம் அருளும் சாவன் மகா சிவராத்திரி - கணவரின் ஆயுள் அதிகரிக்கும் விரத மகிமை
சாவன் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அந்த மாதத்தில் வரும் மகாசிவராத்திரியை சிறப்பா
ஹரித்துவார்: வட இந்தியாவில் ஆடி மாதத்தை சாவன் என புனிதமாதமாக கடைபிடிக்கின்றனர். இந்த மாதத்தில் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து சிவன் கோவிலில் சிவனுக்கு நேரடியாக அபிஷேகம் செய்கின்றனர். சாவன் மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல்நாள் மகாசிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. கணவன் ஆயுள் அதிகரிக்க வட இந்திய பெண்கள் இந்த விரதம் இருக்கின்றனர்.
ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடியில் தொடங்கி மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.

சாவன் என்று அழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம்.அந்த மாதத்தில் திங்கட்கிழமை, பிரதோஷம், மகாசிவராத்திரி நாட்களில் கங்கையிலிருந்து, காவட் மூலம் புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வட இந்தியர்களின் பழக்கம்.
ஆடி மாத பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளியில் தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும் வட இந்தியாவில் சாவன் புனித மாதம். சாவன் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, புனித நீரெடுத்துக்கொண்டு வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
ஆடி மாதத்தில் அம்பிகை பார்வதி தவமிருந்து சிவனை மணம்முடித்தார். அம்பிகையை தவத்தை மெச்சி தனது உடலின் ஒருபாகத்தை சக்தி அளித்தார், ஆடி மாதம் அம்மன் மாதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் சிவனை சிறப்பிக்கும் விதமாக சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக இம்மாத சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் கணவன் ஆயுள் அதிகரிக்கும் என்பது வட இந்திய பெண்களின் நம்பிக்கை.

சாவன் மாதத்தில், சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கன்வார் என்றால் நீண்ட கம்பு என்று பொருள். நீண்ட கம்பின் இருபுறமும் கட்டித்தொங்கவிடப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பானைகளுடன் காவி உடையணிந்து யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தர்கள், ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை சேமித்து தோள்களில் சுமந்து செல்வர். அவ்வாறு சேமிக்கப்படும் நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்வர். இந்த பயணம் மேற்கொள்பவர்கள் கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படுவர். வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்வார் யாத்திரை இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று பிரதோஷ தினமாகும். அதோடு இன்று சாவன் மாத மகாசிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. கொரோனா காலமாக இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியிலும் சாவன் மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள ஜோதிர்லிங்க தலமான மஹாகாளேஸ்வரர் ஆலயத்தில் சவான் மாத சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 5 மணி முதல் 1 மணிவரைக்கும் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டனர். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அபிஷேகம் செய்து வழிபட்டனர். சிவனுக்கு வில்வ இலைகளை அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications