For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா - 19ல் தேரோட்டம், 20ல் ஆருத்ரா தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா வருகிற 11ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழா சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 11ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. 19ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 20 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஆராட்டு விழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 11ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Suchindram Thanumalayasamy Temple Markazhi Festival flag hoisting on 11th December

10ஆம் தேதி காலை 9.15 மணியளவில் திருவிழாவிற்கான மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியர் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேள, தாளம் முழங்க முத்துக்குடை ஏந்தி வந்து கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

11ஆம் தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் தாணுமாலயர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டபள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடக்கிறது.

12ஆம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதலும், 9 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வருதலும், இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது.

Suchindram Thanumalayasamy Temple Markazhi Festival flag hoisting on 11th December

13ஆம் தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமானம் வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும், இரவு 10.30 மணிக்கு சாமி வீதிஉலா வரும்போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும். 14ஆம் தேதி காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், இரவு 10 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் நடைபெறும்.

15ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் காட்சியும், மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடக்கிறது.

Suchindram Thanumalayasamy Temple Markazhi Festival flag hoisting on 11th December

16ஆம் தேதி காலை 8 மணிக்கு வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடைபெறும். 17ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி வீதி உலா வருதலும், இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடக்கிறது.

18ஆம் தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும், பேரம்பலம் கோவில் முன் நடராஜ பெருமான் ஆனந்த நடன காட்சியும், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும் நடக்கிறது.

19ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண காட்சியும், திருவிழாவின் இறுதி நாளான 20 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜ மூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு விழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Suchindram Thanumalayasamy Temple Markazhi Festival - Therottam on the 19th and Arudra Darshan on the 20th 2021.Markazhi Arudra Darshan Festival is going on for 10 days starting with the flag hoisting on the 11th at Suchindram Thanumalayasamy Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X