சுக்கிரன் பெயர்ச்சி 2023: குரு சுக்கிரன் கூட்டணி..5 ராசிக்காரர்களுக்கு வீடு தேடி வரும் குபேர யோகம்
தேவகுருவும் அசுர குருவும் இணைந்து ஒரு ராசியில் பயணம் செய்யும் போது சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும் விபரீத ராஜயோகமும் கிடைக்கப்போகிறது.
சென்னை: மீன ராசியில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருக்க கூடிய இந்த நிலையில் சுக்கிரன் உச்சம் பெற்று அமரப்போகிறார். வரும் 15ஆம் தேதி முதல் குருவும் சுக்கிரனும் ஒன்றாக ஒரே ராசியில் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும் சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகமும் தேடி வரப்போகிறது. குருவும் சுக்கிரனும் எதிர் எதிர் துருவங்கள் இருவரும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும் சிலருக்கு தீமையும் உண்டாகும். வரக்கூடிய நாட்களில் யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் குருபகவான் இயற்கை சுபர் தேவர்களுக்கு குருபிரகஸ்பதி. அதே போல மற்றொரு சுப கிரகமான சுக்கிரன் அசுரர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர். குருபகவான் மனித வாழ்க்கையில் திருமணம், புத்திர பாக்கியம், ஆஸ்தி, சொத்து சுகம், முன்னோர்கள் நிலையான புகழ், அரசியல் வெற்றி, பொதுமக்கள் சேவை அனைவரும் விரும்பும் மனிதராக இருப்பது ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கிறார்.

சுக்கிர பகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். எதிரியின் வீடான குருவின் வீட்டில் மீனம் ராசியில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான். இப்போது கும்ப ராசியில் சனியுடன் உள்ள சுக்கிரன் இன்னும் சில நாட்களில் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தில் பகையாக இருக்கும் குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், சுப பலனை தருகிறார். குருவும் சுக்கிரனும் 5, 9, 11ஆம் இடங்களில் நின்று இருந்தால் அவரவர் உரிய சுப பலனைத் தருவார்கள்.குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை.
குருவுக்கு தான் நின்ற ராசியில் இருந்து 5, 7 மற்றும் 9 ம் பார்வையாக பிற ராசிகளைப் பார்ப்பார். இதில் விசேஷப் பார்வையாக 5, 9 ஆம் ராசியை பார்ப்பார். 'குருபார்க்க கோடி புண்ணியம்' என்பார்கள். இதன் பலனை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். சுக்கிரன், தான் நின்ற ராசியில் இருந்து 7 ஆம் பார்வையாக பிற ராசியைப் பார்ப்பார். இந்த இரண்டு கிரகங்கள் பகையாக இருந்தாலும், இருவரும் ஓருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டால் சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
குரு-சுக்கிரன் இருவரும் 7ஆம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்ததுக் கொண்டால், இருவரும் எந்த ராசியில் எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள். பொதுவாக குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் பார்க்கும் வகையில் ஜாதகம் அமைந்த அன்பர்களுக்கு மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். குரு, சுக்கிரன் நேரடி பார்வை பெற்ற ஜாதகர்கள் தன் சுய உழைப்பால் வெற்றி பெற்று வசதியான வாழ்க்கை அமையும்.

குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளில் நின்று 5, 9 ஆம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் பகை, நீசம் நிலையை அடைந்து இருந்தாலும், சுக்கிரன் தனக்குரிய சுப பலனைத் தருவார். குரு, பகை ராசிகளான ரிஷபம், துலாம், மிதுனம் ராசிகளில் நின்று 5, 9ஆம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், அரை பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார். அதே நேரம் கும்பம் ராசியில் நின்று சுக்கிரனை 5, 9ஆம் பார்வையாக பார்த்தால் முக்கால்பங்கு சுப பலன் கிடைக்கும். குரு பகவான் மகரத்தில் நின்று 5, 9 ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால் கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார். இதில் சுக்ரன் ஆட்சி, நட்பு ராசியில் இருந்தால் சுக்கிரனே முழு சுப பலனையும் தந்து விடுவார்.
மேஷ ராசிக்காரர்களே விரைய ஸ்தானமான 12வது வீட்டில் குரு, சுக்கிரன் இணைவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். விபரீத ராஜ யோகத்தால் குபேர யோகம் தேடி வரும். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் பணமழை பொழிந்தாலும் தொழில் வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
ரிஷபம் ராசிக்காரர்கள் லாப ஸ்தானத்தில் குருவும், சுக்கிரனும் இணைவதால் தம்பதியரிடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமணம் கைகூடி வரப்போகிறது. தொட்டது துலங்கும் காலமாகும்.
மிதுன ராசிக்காரர்களே சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும் காலம் இது. இசை, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
பண வருமானம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
கடக ராசிக்காரர்களே 9வது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் குருவோடு சுக்கிரன் இணைந்திருப்பது குதூகலமான அமைப்பாகும். வெளிநாட்டு பயணம் நன்மையை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம குருவோடு எட்டாவது வீட்டில் சுக்கிரனும் மறைவதால் உங்களைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினாலும் கண்டு கொள்ள வேண்டாம். முக்கியமான முடிவுகளை ஒத்திப்போடுவது நல்லது. கணவன் மனைவி இடையே பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
கன்னி ராசிக்கு 7வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைவதால் குடும்பத்தில் தேவையில்லாத பேச்சுக்களில் நேரத்தை செலவிட வேண்டாம். பணம் விசயமாக யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் முதலீடுகளில் நிதானம் தேவை.
துலாம் ராசிக்காரர்களுக்கு 6வது வீட்டில் குருவுடன் சுக்கிரன் இணைவதால் வேலைப்பளு அதிகரிக்கும். தனிமையாக உணர்வீர்கள். வெளியிடங்களில் சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை. விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மனது முழுக்க காதல் உணர்வுகள் நிரம்பி வழியும். 5வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து இருப்பதால் காதலர்கள் இணைந்து இருக்கக் கூடிய காலம் இதுவாகும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு 4வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணையப்போவதால் பயணங்களினால் பலன் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. காதலர்களுக்கு இடையே பொறுமையும் நிதானமும் அவசியம்.
மகரம் ராசிக்காரர்களே முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணையப்போகின்றனர். சிறு பயணங்களால் பலன்கள் கிடைக்கும். உங்களைப் பற்றி புறம் பேசுபவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீடான லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் இணையப்போவதால் குடும்பம், பணம் விசயங்களில் சாதகமான செயல்களால் நன்மைகள் நடக்கும்.
மீன ராசிக்காரர்களே உங்க ஜென்ம ராசியில் குரு உடன் சுக்கிரன் இணையப்போவதால் பிரிந்து சென்ற உறவுகள் இணையும் காலம் இது. சந்தோஷ தருணங்கள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நிம்மதியும் சந்தோஷமும் சேரும் காலமாகும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications