விநாயகர் சதுர்த்தி.. பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்..மூஞ்சூரு வாகனமானது எப்படி தெரியுமா?
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் நாளைய தினம் முக்கிய நிகழ்வாக கஜமுகாசூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும் அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். கஜமுகாசூரசம்ஹாரம் நடைபெறும் புராண கதை பற்றி பார்க்கலாம்.
காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு, வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி கற்பக விநாயகர் கோயிலில் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது.
ஆறாம் திருநாளான நாளை சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே கற்பகவிநாயகர் எழுந்தருளி திருவீதி உலாவின் போது அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. புராண நிகழ்வாக இந்த கஜமுகாசூரசம்ஹாரம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

விநாயகர் வாகனம்
சிங்கம், புலி,காளை, மயில்,பாம்பு என பல வாகனங்களை தெய்வங்கள் வைத்திருக்க சாதாரண மூஞ்சூருவை வாகனமாக ஏற்றுக்கொண்டது பற்றி புராண கதை ஒன்று உள்ளது. மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திடன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவனை கொல்வதற்காக இறைவன், ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை யானை முத்தோடும், மனித உடலோடும் தோற்றுவித்தார். பிறகு அசுரனை வதம் செய்யும்படி அனுப்பி வைத்தார்.

பெருச்சாளி
சிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அக்கொம்பினால் அசுரனைக் கொன்றார். உடனே அசுரன் ஒரு பெருச்சாளி உருவம் தாங்கி விநாயகரை எதிர்த்துப் போரிட, விநாயகர் பெருச்சாளியை வென்று அதனைத் தன் வாகனமாக ஆக்கிக் கொண்டார்.

கஜமுகாசூரசம்ஹாரம்
உடனே தேவர்களும் முனிவர்களும் மற்றும் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் துன்பங்களை அகலச் செய்த விநாயகப் பெருமானை சதுர்த்தி தினத்தன்று வழிபட்டு கஜமுகாசுரனுக்குத் தாங்கள் செய்யும் மரியாதைகளாக தலையில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணம் போடுதல் முதலிய கடமைகளைத் செய்யத் தொடங்கினார்கள். இந்த நிகழ்வை உணர்த்தும் வகையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்றைக்கும் கஜமுகாசூர வதம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் 6ஆம் திருநாளன்று கஜமுகாசூரசம்ஹாரம் நாளைய தினம் நடைபெறுகிறது.

பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்
7ம் திருநாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 8ஆம் திருநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 9ம் திருநாளான ஆகஸ்ட் 30ம் தேதி காலையில் திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். அன்று மாலை 4.00 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தி
பத்தாம் திருநாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி காலையில் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆ.முத்துப்பட்டணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications