விருச்சிக ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
விருச்சிக ராசி அன்பர்களே! இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நோய் தொல்லைகள் நீங்கி தேக ஆரோக்கியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் கலகலப்பு கூடும். தோப்பு துறை வகையில் வரவுகள் வந்து சேரும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்கள் விலகும். பொருள் இழப்போ நஷ்டமோ ஏற்படாது. எதிர்ப்புகள் முனை மழுங்கி போகும். குலதெய்வ அருள் கிடைக்கும். சிவ பூஜை மூலம் மிருத்யுஞ்ச யோகம் உண்டாகும்.
விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆசைகள் நிறைவேறும்.
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் யோக பலன் அதிகரிக்கும்.
கேட்டை நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு கூடும்.
இன்று உங்கள் பலம்:
எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கும் நண்பர்கள். எதையும் எதிர்க்கக் கூடிய துணிச்சல் மிகுந்த மனம்.
இன்று உங்கள் பலவீனம்:
எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். நல்ல நண்பரே எதிராக வேலை செய்வார்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 வாகனங்கள் ஓட்டும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம்.
2 பிள்ளைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.
3 தொல்லை தரும் நண்பர்களிடம் ஒதுங்கி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 3,6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
| தேதி | 6 - ஆனி - பராபவ வருடம் சனி |
| நாள் | சனி |
| திதி | சஷ்டி (up to 3:47 pm) சப்தமி (up to June 21, 3:21 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:25 am) பூரம் (up to June 21,9:31 am) |
| யோகம் | அமிர்த-சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 9:30 - 10:30 pm |
| இராகு காலம் | காலை 9.00 - 10.30 |
| எமகண்டம் | மதியம் 1.30 - 3.00 |
| குளிகை | காலை 6.00 - 7.30 |
| சூலம் | கிழக்கு |
| பரிகாரம் | தயிர் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 5:47 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:33 PM |
| சந்திரோதயம் | Jun 20 10:47 AM |
| சந்திர அஸ்தமனம் | Jun 20 11:21 PM |