ஜாவா சுந்தரேசன் போல மாறப்போகும் ராசியினர்.. வீடு, வாகனம், பணம் போதும் போதும் என சொல்லும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Weekly rasi palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மகரம், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்கள் பெறப் போகும் நற்பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மகரம்: யோக பலனை அதிகமாகப் பெறக்கூடிய ராசிக்காரர்களாக இருப்பீர்கள். எதிர்பாராத யோகங்கள், சந்தோஷங்களைப் பெறுவீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். காது, மூக்கு, தொண்டை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அசிடிட்டி, பல் தொடர்பான நோய்களில் அதிக கவனம் தேவை.

Weekly rasi palan Astrology

சிவ வழிபாடு, சிவ மந்திரங்களைக் கூறுவது நல்ல பலன்களைத் தரும். வாகனங்களை ஓட்டும்போது அதிக கவனமாக இருக்க வேண்டும். சட்ட சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மேலதிகாரிகள் தேவையில்லாத குழப்பங்களுக்கு ஆட்படக் கூடிய அமைப்பு ஏற்படும். சுப விரைய பிராப்தம் அனுகூலத்தை தரும். சுப செய்திகளுக்கு குறைவிருக்காது. நல்ல விஷயங்கள் அனைத்தும் நடந்தே தீரும்.

திருமண அமைப்பு, புத்திர சந்தான அமைப்பு உள்ளது. வீடு கட்டுவது, நிலம் வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துகளில் இருந்து பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தி ஏற்படும். பண வரவுக்கான உத்திரவாதம் கிடைக்கும். பெரிய அளவுக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படும். பணக்காரர்கள், மேல்தட்டு மக்களால் உங்களை வைத்து தொழில் அல்லது கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்தேறுவது உறுதி

கும்பம்: தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் துணை அல்லது துணைவியார் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்பத்தில் உங்களுடைய தலையீடு கூடவே கூடாது. தலை, கண், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். சுப விரைய பிராப்தம் உண்டு. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.

வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். முதலீடுகளுக்கான உத்திரவாதம் கிடைக்கும். தொழில், வியாபாரம், படிப்பு ரீதியான முடிவுகள் முன்னேற்றத்தை தரும். தனிப்பட்ட விஷயங்களில் செல்வாக்கு கூடக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழில் ரீதியாக அதி அற்புதத்தைக் காண்பீர்கள். பெருமாள் தாயார், அனுமன் வழிபாடு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.

உத்தியோகத்தில் மாற்றங்கள் வந்தால் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. முன்னேற்றமான காலமாக இருக்கும். தனிப்பட்ட தொழில் தொடங்குபவர்களுக்கு சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். பெரும் வெற்றி, பெரும் சந்தோஷத்தை பெறுவீர்கள். நல்லது நடக்க கூடிய அதி அற்புதமான காலமாக இருக்கும். தொழில், வியாபாரம், கல்வியில் நல்ல அனுகூலத்தையும், மகிழ்ச்சியையும் தரும் காலமாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் பழைய கடன்களை கட்டி முடிப்பீர்கள். முகம், கழிவுப் பாதையில் உள்ள உறுப்பில் கவனமாக இருப்பது முக்கியம். முதுகு தண்டுவட உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜென்ம சனி வருவதால் பதட்டம் உண்டாகும். நரசிம்மர் வழிபாடு நன்மையைத் தரும். திருமணத் தடை, புத்திர சந்தானத் தடை குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரக்கூடிய நேரமாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பெற்றோர்களுடன் இருந்து வந்த மனக் கசப்புகள் தீரும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உறவுகள் மேன்மை அடையும். பிள்ளைகளுடன் இருந்த வந்த பிணக்குகள் நீங்கும். நகை, வாகன அமைப்பு, ஆடை ஆபரணங்கள், டைமண்ட் அதிகமாக வாங்குவதற்கான யோகம் உண்டு. நகைகளை அள்ளிக் குவிப்பீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனையும் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்வது வெற்றியை தரும். ஏற்றம், சந்தோஷம், சுப காலங்கள், அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+