"கேஜிஎப்" பறந்த தனிப்படை.. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைக்கும் இதுக்கும் என்ன தொடர்பு? ஷாக் பின்னணி
திருவண்ணாமலை கொள்ளை போல ஒரு ஏடிஎம் கொள்ளை தமிழ்நாடு வரலாற்றில் நடந்ததே இல்லை.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் கர்நாடகாவில் உள்ள கேஜிஎப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு போலீசார் விசாரணை நடத்த முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தீரன் அதிகாரம் 1 படத்தை விட பல திருப்பங்களுடன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பல மாதங்கள் திட்டமிட்டு, மிகவும் நுணுக்கமாக இந்த கொள்ளையை கொள்ளையர்கள் மேற்கொண்டு உள்ளனர் என்பதால் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் கொஞ்சம் திணறி வருகின்றனர். அதே சமயம் கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாக போலீசார் தரப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் 2 - 3 நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று கூறப்படுகிறது .

கொள்ளை
திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றதிலேயே மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பார்க்கப்படுகிறது. வெறும் 2 மணி நேரத்தில் 72 லட்சம் ரூபாய் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் வெறும் 4 கிமீ இடைவெளியில் இருக்கும் 4 ஏடிஎம்களை திருடி உள்ளனர். இதில் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ.3,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. போளூரில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.19,50,000 மற்றும் தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.32,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

மோசமான நிலை
இப்படி ஒரு கொள்ளை தமிழ்நாடு வரலாற்றில் நடந்ததே இல்லை. இந்த கொள்ளையை கொள்ளையர்கள் மிகவும் வித்தியாசமாக மேற்கொண்டு உள்ளனர். போலீஸ் இல்லாத சாலையில் உள்ள ஏடிஎம் சென்று அந்த ஏடிஎம் கதவை மூடி உள்ளனர். பின்னர் உள்ளே சென்று பின் பக்கம் சர்வர் கதவை உடைத்து சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி உள்ளனர். அதன்பின் கேமராவை உடைத்து நொறுக்கி உள்ளனர். பின்னர் ஏடிஎம் மிஷினை பின்னர் வென்டிங் மிஷின் வைத்து உடைத்து உள்ளனர். பின்னர் பணத்தை திருடியதும் மிஷினை தீ வைத்து உள்ளனர். வெறும் 4 கிமீ இடைவெளியில் இருக்கும் 4 ஏடிஎம்களை திருடி உள்ளனர்.

எங்கே இப்போது?
இவர்கள் கொள்ளையடிக்கப்பட்டது ஆந்திர எல்லைக்கு அருகே என்பதால் எளிதாக ஆந்திராவிற்கு தப்பி ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆந்திர பிரதேசத்திற்கு இவர்களின் சுமோ சென்றதாக கூறப்படுகிறது. சுமோ ஒன்றில் இவர்கள் பயணம் செய்ததற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. இந்த கொள்ளை தொடர்பாக டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் 6 தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. ஹரியானாவை வட இந்திய கும்பல் இந்த கொள்ளையை செய்து இருப்பதாக கூறப்படுகிறது இந்த கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கேஜிஎப் ஏன்?
இந்த நிலையில்தான் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் கர்நாடகாவில் உள்ள கேஜிஎப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு போலீசார் விசாரணை நடத்த முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலுக்குத்தான் ஆந்திராவில் இருந்து கொள்ளையர்கள் சென்றுள்ளனர். இந்த தகவல் அவர்களுக்கு சிசிடிவி மூலம் கிடைக்கவில்லை. மாறாக கர்நாடகாவில் இருக்கும் இன்பார்மர் ஒருவர் மூலம் இந்த தகவல் போலீசுக்கு கிடைத்து உள்ளது.

இன்பார்மர்
அதாவது அந்த கொள்ளை கும்பல் கொள்ளைக்கு முன்பாக கேஜிஎப்பில் தங்கி இருக்கலாம். அதனால் கொள்ளைக்கு பின்பாகவும் அவர்கள் இதே பகுதிக்கு சென்று இருக்கலாம் என்று போலீசாரிடம் அந்த இன்பார்மர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே போலீசார் அங்கே சென்றதாகவும், அந்த பகுதியில் 6 கொள்ளையர்களை தங்க வைத்து இருந்த ஒரு நபரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் தற்போது திருவண்ணாமலை - ஆந்திர - கேஜிஎப் - ஹரியானா என்று பெரிய வலைப்பின்னலாக நீண்டு கொண்டு இருக்கிறது.

கொள்ளை கும்பல்
இந்த கும்பல் ஹரியானாவில் இருந்து வந்து மும்பை, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கொள்ளையடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஹரியானாவிலும் இவர்களின் இருப்பிடம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கே இவர்கள் தப்பி சென்றுவிட்டனரா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அங்கே இருக்கும் போலீசார் உதவியுடன் இந்த விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் பெரும்பாலும் சுங்கசாவடிகளை தவிர்த்துவிட்டு உள்ளூர் வழியாக பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாக போலீசார் தரப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் 2 - 3 நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று கூறப்படுகிறது .
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications