சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற சபாநாயகர் மறுப்பு - எதிர்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து நீக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த புதன்கிழமை அன்று அவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி திமுகவை சேர்ந்த 80சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் ஒரு வார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நேற்று சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சபாநாயகர் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று நேற்று கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் தனபால் நிராகரிக்கவே, அவர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினர். சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சென்றனர்.
இன்றும் கேள்வி நேரத்திற்கு பிறகு எட்டு திமுக எம்எல்ஏக்கள் உடன் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் லீக் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சேர்ந்து மீண்டும் வலியுறுத்தினர்.
அதற்கு சபாநாயகர் கடந்த புதன்கிழமை அன்று தான் மிகவும் பொறுமையாக இருந்ததாகவும், திமுகவினரின் செயல்பாடுகள் எல்லை மீறவே அப்படியொரு உத்தரவை பிறப்பித்ததாகவும் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரவை திரும்பப்பெற சபாநாயகர் மறுக்கவே, திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையை வெளிநடப்பு செய்து அவைக்கு வெளியே திமுக நடத்திய மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications