டெல்லி ஹோட்டல் தீ விபத்து.. கோவையை சேர்ந்த 2 தமிழர்களும் உடல் கருகி பலி
டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.
Recommended Video

டெல்லி: இன்று விடிகாலை டெல்லி ஸ்டார் ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
டெல்லியின் கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென 4.30 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது.

ஹோட்டலில் மொத்தம் 65 அறைகளில் 150-க்கும் அதிகமானோர் தங்கியிருந்தனர். அதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அடக்கம். சுற்றிலும் தீ மளமளவென பரவி விட்டதால் வெளியே அவர்களால் உடனடியாக தப்பி வர முடியவில்லை என்பதால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மூச்சுத்திணறியே இறந்திருக்கிறார்கள். மேலும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஜன்னல் வழியாக குதித்தவர்களும் உயிரிழந்த பரிதாபமும் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அரவிந்த் சிவகுமாரன் , நந்தகுமாரன் ஆகியோர் உடல் கருகியே உயிரிழந்து விட்டதாகவும், இவர்கள் இருவருமே கோவையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்களும் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications