கிரெடிட், டெபிட் கார்டு இருக்கா? டேட்டாவை பாதுகாக்க மறக்காம இதை பண்ணுங்க.. கொஞ்ச நாள் தான் இருக்கு
டெல்லி: கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் கார்டு தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகமே இன்று டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ள நிலையில், பேமெண்ட் முறைகளும் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாகி வருகிறது. சிறு கடைகள் தொடங்கி பெரும்பாலான கடைகள் டிஜிட்டல் பேமெண்ட்களை வாங்கிக் கொள்கின்றன.
ரொக்கத்தைக் கையில் எடுத்துச் செல்வது திருட்டு பயத்தை ஏற்படுத்துவதால் பெரும்பாலானோர் டிஜிட்டல் பேமெண்ட் பக்கமே செல்கின்றன. இதனால் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

புதிய உத்தரவு
அதேநேரம் கார்டு மூலம் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் போது, வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு, கார்டில் இருந்து பணம் திருடப்படும் ஆபத்தும் உள்ளது. இதற்காக கார்டு பேமெண்ட் முறைகளில் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் மற்றும் இன்-ஆப் பரிவர்த்தனைகளில் (in-app transactions) பயன்படுத்தப்படும் அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தரவுகளும் செப்டம்பர் 30, 2022க்குள் தனித்துவமான டோக்கன்களால் மாற்றப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

டோக்கன்
டோக்கன்மயமாக்கும் நடவடிக்கை மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். மேலும், இது பேமென்ட் அனுபவத்தை மேம்படுத்தும். பரிவர்த்தனைகள் அனைத்தும் மிக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, உங்கள் கார்டு விவரங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட டோக்கனாக சேமிக்கப்படும். இந்த டோக்கன்கள் வாடிக்கையாளர் விவரங்களை வெளியிடாமல் பணம் செலுத்த அனுமதிக்கும்.

ஏன்
கார்டு தரவுகள் மறைக்கப்பட்டு, அவை டிஜிட்டல் டோக்கனாக மாற்றுவதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கி உள்ளது. இதனால் இனி வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்கும். மேலும், இது ஆன்லைன் பரிவர்த்தனைகளை வேகமானதாக ஆக்குவதுடன் ஆன்லைன் மோசடி செய்பவர்களிடமிருந்து கார்டு தகவலைப் பாதுகாக்கிறது. ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கவே இந்த விதியை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.

எப்படி வேலை செய்கிறது
பொதுவாக வாடிக்கையாளர்கள் எளிதாகப் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக எண், CVV மற்றும் காலாவதி தேதி போன்ற கிரெடிட் கார்டு தகவல்கள் சம்மந்தப்பட்ட தளங்களில் சேமிக்கப்படும். இப்படி தனியார் நிறுவனங்களில் சேமிக்கப்படும் தரவுகள் லீக்காகும் ஆபத்து உள்ளன. ஹேக் செய்யப்பட்டால் தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளது. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்படி கார்டு தகவலை அட்டை வழங்கும் நிறுவனங்கள் தவிர வேறு எந்த நிறுவனமும் சேமிக்க முடியாது. ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் டேட்டாக்களையும் டெலிட் செய்ய வேண்டும்.

நீட்டிப்பு
அதற்குப் பதிலாக இந்த டோக்கன் முறையை பேமெண்ட்களில் பயன்படுத்த வேண்டும். டோக்கனைசேஷன் சிஸ்டம் முற்றிலும் இலவசமான முறையாகும். இது ஒருவரின் கார்டின் டேட்டாவைப் பாதுகாக்கிறது. இந்த டோக்கனைசேஷன் என்பது உள்நாட்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த ஜூலை 1ஆம் தேதியே நடைமுறைக்கு வர இருந்த நிலையில், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வந்த கோரிக்கையாள் அது செப். 30 வரை நீட்டிக்கப்பட்டது.

எப்படி செய்ய வேண்டும்.
ஈ-காமர்ஸ் தளத்தில் பேமெண்ட் செய்யும் போது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவிட வேண்டும். அப்போது கார்டை டோக்கன் மயமாக்கும் ஆப்ஷனை தேர்வு செய்யவும். டோக்கனை உருவாக்குவதை அங்கீகரிக்கவும். பரிவர்த்தனையை முடிக்கவும் வங்கி அனுப்பிய OTPஐ பதிவிட வேண்டும். இதன் மூலம் கார்டின் தரவுகள் அனைத்தும் டோக்கன்களாக மாற்றப்படும். மேலும், இது முற்றிலும் இலவசமானது என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications